வரலாறு, புராணம், இதிகாசம், அதோடு கொஞ்சம் காவி இந்த காம்பினேஷனில் எடுக்கப்படும் படங்கள் ஆந்திரா முதல் வட இந்தியா வரை ஓடும் என்பதை ஆந்திரத் திரையுலகம் நன்கு புரிந்து கொண்டுள்ளது.
இதோடு என் டி ஆர் பாலகிருஷ்ணா அவருக்கு ஜோடியாக நயன்தாரா இணைந்தால் போதாதா? தெலுங்கோடு தமிழ் இந்தி இவற்றில் டப் செய்தால் போதும், எல்லாரும் வாயைப் பிளந்து கொண்டு பார்ப்பார்கள். தரமான படம் எல்லாம் யார் கேட்கிறார்கள். நான்சென்ஸ்.
இந்த நோக்கத்தில், வீரசிம்ஹாரெட்டி’ படம் மூலம் வெற்றி பெற்ற பாலகிருஷ்ணா – இயக்குனர் கோபிசந்த் மலினேனி கூட்டணி எடுக்கும் புதிய வரலாற்றுப் படம் துவங்கப்பட்டு இருக்கிறது (பேரு இன்னும் வைக்கல).

சிம்ஹா, ஜெய் சிம்ஹ, ‘ஸ்ரீ ராம ராஜ்யம்’ ஆகிய படங்களுக்குப் பிறகு பாலகிருஷ்ணா – நயன்தாரா இணையும் நான்காவது படம் இது.
ஆந்திர பிரதேச அமைச்சர்கள் அனகனி சத்ய பிரசாத் மற்றும் கோட்டிப்பட்டி ரவி குமார் ஆகியோர் திரைக்கதை நகலை தயாரிப்பாளர்களிடம் வழங்க, பாலகிருஷ்ணாவுடன் பல வெற்றி படங்களை இணைந்து வழங்கிய இயக்குநர் B. கோபால் கிளாப் அடிக்க, பாலகிருஷ்ணாவின் மகள் தேஜஸ்வினி கேமராவை ஸ்விட்ச் ஆன் செய்து படத்தைத் துவங்கி வைத்தார்.
ஆகவே தமிழ மக்களே … !
— ராஜ திருமகன்
