ADVERTISEMENT

நயன்தாராவின் புது பிராண்ட் “Femi9”!

Published On:

| By Kavi

Nayanthara New Brand "Femi9"

தமிழ் சினிமா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர் நடிகை நயன்தாரா. தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்தில் நடிப்பது மட்டுமின்றி புதிய தொழில்களை தொடங்குவதிலும் தொடர்ந்து அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றார் நயன்தாரா.

சமீபத்தில் 9ஸ்கின்ஸ் என்ற ஓர் புதிய அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தை மலேசியாவில் லாஞ்ச் செய்தார் நயன்தாரா. அந்த லாஞ்ச் நிகழ்ச்சியில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலானது

ADVERTISEMENT

.Nayanthara New Brand "Femi9"
இந்நிலையில் இன்று (அக்.24) நயன்தாரா அடுத்ததாக “Femi9” என்ற புதிய சானிட்டரி நாப்கின் பிராண்டை தொடங்கியுள்ளார். Femi9 சானிட்டரி நாப்கின் பிராண்ட் குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் நயன்தாரா வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில் விக்னேஷ் சிவனும் இடம் பெற்றுள்ளார்.

இந்த புதிய பிராண்ட் குறித்து நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்த விஜயதசமி திருநாளில் FEMI9 எனும் புதிய பயணத்தை தொடங்குவதில் பெருமை கொள்கிறேன்.

ADVERTISEMENT

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

Nayanthara New Brand "Femi9"

ADVERTISEMENT

தனிமனித சுகாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த Femi9 ஒரு பிராண்ட் மட்டுமல்ல; இது ஒவ்வொரு பெண்ணின் வலிமை மற்றும் அழகுக்கான ஒரு அடையாளமாகும். பெண்களுக்கு அதிகாரமளிக்கும் இந்த முயற்சியைக் கொண்டாட என்னுடன் இணையுங்கள்! ஒருவரையொருவர் ஆதரிப்போம், இணைந்து உயர்வோம் என்று பதிவிட்டிருக்கிறார்.

நயன்தாராவின் இந்த புதிய முயற்சிக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

– கார்த்திக் ராஜா

சிங்கப்பூர் செல்லும் ஓ.பன்னீர்: மெடிக்கலா, பொலிடிக்கலா?

டிஜிட்டல் திண்ணை: சிறையில் செந்தில்பாலாஜியுடன் சந்திப்பா? கௌதமியை ஏமாற்றிய அழகப்பனுக்கு உதவினாரா? அமர் பிரசாத்துக்கு அதிகரிக்கும் நெருக்கடி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share