மீண்டும் அம்மனாக மாறும் நயன்தாரா

Published On:

| By Kavi

நடிகை நயன்தாரா மீண்டும் அம்மனாக நடிக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவில் கடந்த காலங்களில் வெளியாகி ஹிட் அடித்த படங்கள் ரீ ரிலீஸ் செய்வது, அல்லது இரண்டாம் பாகம் எடுப்பது ஆகியவை அதிகரித்து வருகிறது.

அந்தவகையில் 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் படம் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு நேற்று வெளியானது.

இந்நிலையில் நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்படவுள்ளது.

2020ஆம் ஆண்டு ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா, ஊர்வசி ஆகியோரது நடிப்பில் வெளியான படம் மூக்குத்தி அம்மன். ஆர்.ஜே.பாலாஜி, என்ஜே சரவணனுடன் இணைந்து இப்படத்தை இயக்கியிருந்தார்.

Image

டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் இந்த படம் வெளியானது. இதில் அம்மனாக நயன்தாரா அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதோடு ஆர்.ஜே.பாலாஜி, ஊர்வசி ஆகியோரது கமெடி என இந்த படம் ரசிகர்களை கவர்ந்தது.

இப்படத்தின் இரண்டாம்  பாகம் குறித்து அதிகாரப்பூர்வமாக ஐஷரி கணேசின் வேல்ஸ் ஃப்லிம் இண்டர்னேஷனல் அறிவித்துள்ளது.

Mookuthi Amman 2 | Official Announcement Video | Coming Soon

“லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்கவுள்ளார். நல்லவர்கள் அவளுடைய ஆசியை பெறுவார்கள், தீயவர்கள் அவளுடைய காலடியில் நசுக்கப்படுவார்கள்” என்ற கேப்ஷனுடன் இரண்டாம் பாகம் வீடியோவை தயாரிப்பு நிறுவனம்  வெளியிட்டுள்ளது.

இந்நிலையில்  #Nayanthara, #Mookuththi amman2 ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் உள்ளன.

நயன்தாரா நடிப்பில் அடுத்து ‘டெஸ்ட்’, ‘மண்ணாங்கட்டி’, ‘டீயர் ஸ்டூடண்ட்ஸ்’ ஆகிய படங்கள் திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

விமர்சனம் : இந்தியன் – 2

விக்கிரவாண்டி தேர்தல்… வாக்காளர்களுக்கு தேங்க்ஸ் சொன்ன ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share