நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டை குழந்தை பெற்ற விவகாரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட மருத்துவமனை எது என்பது கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள குடும்ப நல பயிற்சி மைய வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தை விவகாரத்தில் நடைபெற்று வரும் விசாரணை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், நயன்தாரா விக்னேஷ் இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை இணை இயக்குநர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது.
எந்த மருத்துவமனை என்பது கண்டறியப்பட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக சிகிச்சை அளிக்கப்பட்டதா என்பது குறித்து மருத்துவக்குழுவினர் ஆய்வு செய்வார்கள்.
தேவைப்பட்டால் நயன்தாரா விக்னேஷ் தம்பதியினரிடம் நேரில் விசாரணை மேற்கொள்ளப்படும்.
ஒரு வார காலத்திற்குள் அறிக்கை கேட்கப்பட்டு இருக்கிறது. இதில் விதிமீறல் உள்ளதா? என்னென்ன விதிமீறல் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.
கலை.ரா
