வெயில் காலம் வந்துவிட்டாலே வியர்வை வாடை பாடாய்ப்படுத்தும். இதைத் தவிர்க்க பெர்ஃபியூம், டியோடரன்ட் போன்றவற்றை அதிக அளவில் பயன்படுத்துவோம். இந்த நிலையில் இயற்கையான முறையில் உடலை நறுமணத்துடன் வைத்துக்கொள்ள இதோ சில வழிகள்…
குளிக்கும் நீரில் முதல் நாள் இரவே சிறிது வெட்டிவேர், நன்னாரி, விலாமிச்சை வேர் போன்றவற்றை வெட்டி, இடித்து ஒரு துணியில் கட்டி, அடுத்த நாள் காலை வரை ஊற வைக்கலாம். அந்தத் தண்ணீரில் குளிக்கும்போது உடலில் இயற்கையான நறுமணம் பரவுவதோடு, வியர்க்குரு போன்ற பிரச்சினைகளும் வராமல் தடுக்கப்படும்.
எலுமிச்சைப்பழத் தோலை தண்ணீரில் ஊறவைத்தும் குளிக்கலாம். தாழம்பூ கிடைத்தால் அதை சின்னச்சின்ன துண்டுகளாக வெட்டி, தண்ணீரில் போட்டு வைத்துக் குளிக்கலாம்
.
அத்தர் போன்ற ஸ்ட்ராங்கான மணமுள்ளவற்றை வெயில் காலத்தில் பயன்படுத்தவே கூடாது. வெட்டிவேர், சந்தனம், விலாமிச்சை வேர், ரோஜா, எலுமிச்சைப் பழத்தோல் கலந்த மூலிகை குளியல் பொடி உபயோகித்துக் குளிக்கலாம். இதை உடலில் தடவி, ஐந்து நிமிடங்கள் வைத்திருந்து குளித்தால் வியர்வை வாடை நீங்கும்; உடலில் இயற்கையான நறுமணத்தை உணர்வீர்கள்.
இரவு தூங்கும்போதும், விலாமிச்சை வேர், நன்னாரி வேர், ரோஜா இதழ் போன்றவற்றை தலையணை உறைக்குள் வைத்துக்கொண்டு தூங்கலாம். இது நல்ல உறக்கத்தைத் தரும், வியர்வையால் கூந்தலில் ஏற்படும் வாடையையும் தவிர்க்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாகிஸ்தானில் நடைபெறும் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்தியா பங்கேற்குமா?
கிச்சன் கீர்த்தனா : காளான் பாஸ்தா