”முன்பெல்லாம் ஆண்களுக்குதான் முடி உதிர்ந்து வழுக்கை விழும். ஆனால், இன்றோ 33 சதவிகித பெண்களுக்கும் வழுக்கை விழத் தொடங்கிவிட்டது.
ஷாம்பு, தைலம் என விளம்பரங்களைப் பார்த்து வாங்கிக் குவித்தாலும் முடி மட்டும் முளைப்பது இல்லை. இதற்கு, நம் தலையின் மீது உள்ள உறைப்பைகளில் ஹார்மோன் சுரப்பு நின்று போவதும், புரதம், இரும்பு, துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துப் பற்றாக்குறையும் முக்கியக் காரணங்கள்” என்கிறார்கள் தோல் சிகிச்சை துறை நிபுணர்கள்.
“பெண்களுக்கு மாதவிலக்கு மற்றும் பிரசவ காலங்களில் ஏற்படும் புரதம், இரும்பு, துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்து இழப்பால் முடி உதிரலாம்.
தலைமுடி நன்றாக வளர புரதச் சத்தும் அவசியம். இது, வளர்ச்சியைத் தூண்டி, முடியைப் பாதுகாக்கும். புரதச்சத்து பற்றாக்குறை ஏற்படும்போது, தலைமுடி நிறம் மாறி, வலுவிழந்து, உடைந்துபோகும். முடி முழுமையாக அறுந்துபோகும்.
மாதவிலக்கின்போது அதிக உதிரப்போக்கு ஏற்பட்டால் அது ரத்த சோகைக்கு வழிவகுக்கும். ரத்தச்சோகை இருந்தால்தான் முடி உதிரும் என்பது இல்லை. கொஞ்சம் இரும்புச்சத்துப் பற்றாக்குறை இருந்தாலும்கூட முடி உதிரும்.
அதேபோல், உடல் வளர்ச்சி மற்றும் நலத்துக்கு துத்தநாகம் மிகவும் அவசியம். இந்தச் சத்து பல உணவுப் பொருள்களில் இருந்தாலும், அது ரத்தத்தில் உட்கிரகிக்கப்படாமல் போவது உண்டு.
மேலும் சில நோய்களால் பாதிக்கப்படும்போது, துத்தநாகக் குறைபாடு உடலில் குறையும். அப்போதும் முடி கொட்டலாம். இரும்புச்சத்து குறைவு என்றால் அதற்கான மருந்து மாத்திரைகளுடன் உணவு விஷயத்திலும் அக்கறை வேண்டும்.
பேரீட்சை, கறிவேப்பிலை, கீரை வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்வதன் இரும்புச்சத்துக் குறைபாட்டைத் குறைக்கலாம்.
ஹார்மோன் மாற்றங்களாலும் தலையில் பூச்சிவெட்டு வரலாம். இதனால் தலையில் உஷ்ணம் அதிகரித்து மன அழுத்தத்துக்கு ஆளாகி, கொப்பளங்கள் தோன்றலாம். இதனால் முடி உதிர்ந்து வழுக்கைக்கு வழி வகுக்கும்.
இயற்கை சாயம், ரசாயனம் இல்லாத தரமான ஷாம்பூ, அரைத்து செய்யும் சீயக்காய்த்தூள் இவற்றைப் பயன்படுத்துங்கள். தினமும் தலைக்குக் குளிப்பது உடல் சூட்டை குறைக்கும். முடியை சுத்தமாக வைத்திருப்பதன் மூலமும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : பூண்டு காரச்சேவு
முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை: ஸ்டாலின் அறிவிப்பு!
ரூ.106 கோடியா? டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வீட்டில் ரெய்டும்….நாராயணசாமி குற்றச்சாட்டும்!
தீட்சிதர் சஸ்பெண்ட் : அறநிலையத் துறை எப்படி தலையிட முடியும்? – நீதிமன்றம் கேள்வி!