நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
நேஷனல் ஹெரால்டு நிறுவன பங்குகள் பரிமாற்ற விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்த விசாரணையைத் தொடர்ந்து சோனியா, ராகுல் காந்திக்கு எதிராக குற்றப்பத்திரிகையையும் அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.
ஆனால், எந்த ஒரு வழக்குமே பதிவு செய்யாமல் 2013-ம் ஆண்டு தனிநபர் ஒருவர் தெரிவித்த குற்றச்சாட்டு அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை செய்து தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்க முடியாது என டெல்லி சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது. இது அமலாக்கத்துறைக்கு மிகப் பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
