திரைப்பட விருது தொகுப்பு!

Published On:

| By Balaji

67ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, நேற்று திங்கட்கிழமை காலை (25.10.2021) டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்றது.

துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு விழாவுக்குத் தலைமை தாங்கி திரைக் கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்தார். மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல்.முருகன் ஆகியோரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

**கலைப்புலி தாணு – வெற்றிமாறன்**

தமிழில் சிறந்த படமாக வெற்றி மாறனின் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘அசுரன்’ படத்திற்கு கிடைத்தது. இந்த விருதினை படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் தாணுவும், இயக்குநர் வெற்றி மாறனும் பெற்றுக் கொண்டனர்.

ADVERTISEMENT

**தனுஷ்**

ADVERTISEMENT

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் தனுஷ் பெற்றார். ‘அசுரன்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.

**பார்த்திபன்**

பார்த்திபன் ஒருவர் மட்டுமே இயக்கி, நடித்த ‘ஒத்த செருப்பு’ படத்துக்குத் தேர்வுக் குழுவின் சிறப்பு ஜூரி விருது வழங்கப்பட்டது. இதற்கான விருதினை நடிகர் பார்த்திபன் பெற்றுக் கொண்டார்.

**ரசூல் பூக்குட்டி**

சிறந்த ஒலிக் கலவைக்கான தேசிய விருது இதே ‘ஒத்த செருப்பு’ படத்துக்காக சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டிக்கு வழங்கப்பட்டது.

**இமான்**

இசையமைப்பாளருக்கான தேசிய விருது சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்தில் இடம் பெற்ற ‘கண்ணான கண்ணே’ பாடலுக்காக இசையமைப்பாளர் இமானுக்கு வழங்கப்பட்டது.

**விஜய் சேதுபதி**

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்தமைக்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை நடிகர் விஜய் சேதுபதி பெற்றுக் கொண்டார்.

**நாக விஷால்**

சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது மாஸ்டர் நாக விஷாலுக்கு வழங்கப்பட்டது. ‘கே.டி என்ற கருப்புதுரை’ என்ற தமிழ்ப் படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

**மனோஜ் பாஜ்பாய்**

சிறந்த நடிகருக்கான தேசிய விருது இந்தாண்டு இருவருக்குக் கிடைத்தது. ஒருவர் நடிகர் தனுஷ். மற்றொருவர் இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய். ‘போன்ஸ்லே’ என்ற படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக அவருக்கு இந்த விருது கிடைத்தது.

**கங்கனா**

இதேபோன்று ‘மணிகர்னிகா’, ‘பங்கா’ படங்களில் சிறப்பாக நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது நடிகை கங்கனா ரணாவத்துக்கு வழங்கப்பட்டது.

**-இராமானுஜம்**


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share