நாசாவில் ஆட்குறைப்பு: டிரம்ப் அரசின் சர்ச்சையான முடிவு!

Published On:

| By Kavi

NASA layoffs trump administration

அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், நாட்டின் நிதி, நிர்வாக செலவுகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு வழங்கிய உதவித் திட்டமான USAID அமைப்பை கலைத்ததுடன், உலக சுகாதார நிறுவனத்திற்கு (WHO) வழங்கி வந்த நிதியுதவியையும் நிறுத்தியுள்ளது. NASA layoffs trump administration

நிதி சீர்திருத்தத்தின் கீழ், ராணுவம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட துறைகளில் செலவு குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், விஞ்ஞானத்துறையிலும் இது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா, தனது நிர்வாக பணிகளை சீர்திருத்தும் முயற்சியில், பணியாளர்களில் 10 சதவீத பேர் நீக்கப்பட்டுள்ளனர். 

இதன் படி, சுமார் 1,000 தற்காலிக பணியாளர்கள் மற்றும் 750 நிரந்தர பணியாளர்கள் வேலையிழந்துள்ளனர். மேலும், 750 பணியாளர்கள் அரசின் அழுத்தத்தால் விருப்ப ஓய்வு பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், டிரம்ப் அரசின் நிர்வாக சீர்திருத்த குழுவின் பரிந்துரை காரணமாக, இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது.

விஞ்ஞானிகளின் எதிர்ப்பு: திறந்த கடிதம்

18,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றும் நாசாவில், இவ்வாறு நடத்தப்பட்ட ஆட்குறைப்பு அமெரிக்காவின் பல்வேறு அறிவியல் அமைப்புகளின் எதிர்ப்பை பெற்றுள்ளது. குறிப்பாக, 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் உறுப்பினராக உள்ள அறிவியல் கிரக அமைப்பு, முறையற்ற ஆட்குறைப்பை கண்டித்து அமெரிக்க அரசுக்கு திறந்த கடிதம் எழுதியுள்ளது.

அப்பல்லோ திட்டத்திற்குப் பிறகு மிகப்பெரிய அளவிலான பணியாளர்கள் நீக்கப்பட்டதாக இதற்கு முன்பு தகவல்கள் வெளியாகியிருந்தாலும், தற்போதைய நிர்வாக மாற்றம், அறிவியல் திட்டங்கள் மற்றும் திறன் வாய்ந்த விஞ்ஞானிகளை பாதிக்காது என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நிர்வாக பணியில் ஈடுபட்டவர்களையே நீக்கியுள்ளதாகவும், முக்கிய ஆய்வுத் திட்டங்களில் பாதிப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய அறிவியல் சமூகத்தில் அதிர்ச்சி

டிரம்ப் அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைகள், உலகளவில் விஞ்ஞான சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாற்செல் ஆராய்ச்சி மையத்தில் அதிகமான பணியாளர்கள் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. நிதி மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்தின் பெயரில், உலகின் முன்னணி விஞ்ஞான அமைப்புகளில் ஒன்றான நாசாவில் மேற்கொள்ளப்பட்ட இந்த முடிவு, அமெரிக்கா மற்றும் உலக விஞ்ஞானிகளிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. NASA layoffs trump administration

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share