கேரள கோயிலில் குஷ்புவுக்கு பூஜை!

Published On:

| By Kavi

Nari Pooja is held at Vishnumaya Temple

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்புவுக்கு கேரளாவில் உள்ள கோயிலில் நாரி பூஜை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

திருச்சூர் மாவட்டத்தில் பெருங்கொட்டுகரா என்ற கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ விஷ்ணுமயா கோயில் உள்ளது. இங்கு தினமும் மதியம் 12 மணிக்கு விஷ்ணுமயா நடனம் இருக்கும். அப்போது விஷ்ணுமயா கூறும் வாக்கு பலிக்கும் என்று கேரள மக்களால் நம்பப்படுகிறது.

குருமாலி ஆற்று பகுதியில் அமைந்திருக்கும் இந்த கோயிலுக்கு வந்தால் தீர்க்கப்படாத பிரச்சினைகளும் தீரும் என்றும் நம்புகின்றனர்.

Image
இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஒரு விஷேச பூஜையை செய்கின்றனர். அதாவது நாரி பூஜை என்ற பெயரில் நடக்கும் இந்த பூஜைக்காக ஒரு பெண்ணை தேர்ந்தெடுக்கின்றனர்.

கடவுளின் உத்தரவின் பேரில் அந்த பெண் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று விஷ்ணுமயா கோயில் தரப்பில் கூறப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு கோயில் நிர்வாகம் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்புவை தேர்ந்தெடுத்து பூஜை செய்திருக்கிறது. அவரை பூஜை செய்வதற்கான  கட்டளைதாரராக நியமித்திருக்கிறது. இப்படி நியமிக்கப்படும் கட்டளைதாரர்தான் இந்த ஆண்டுக்கான பூஜை பொருட்களுக்கான செலவை ஏற்க வேண்டும்.

இந்தசூழலில் கட்டளைதாரராக நியமிக்கப்பட்டுள்ள குஷ்புவுக்கு பாத பூஜை உள்ளிட்டவை செய்து விஷ்ணுமயா சுவாமிக்கு வழிபாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில்,  “கடவுளின் தெய்வீக ஆசிர்வாதம். திருச்சூரில் உள்ள விஷ்ணுமயா கோயிலில் நாரி பூஜை செய்ய அழைக்கப்பட்டதை மிகவும் அதிர்ஷ்டமாக உணர்கிறேன்.

இந்த பூஜைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் மட்டுமே அழைக்கப்படுவர். தெய்வமே அந்த நபரைத் தேர்ந்தெடுப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். இப்படி ஒரு பெருமையை எனக்கு வழங்கிய கோயிலில் உள்ள அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள்.

தினமும் பிரார்த்தனை செய்பவர்களுக்கு பல நல்ல விஷயங்கள் நடக்கும் என்பதை நான் நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

விஷ்ணுமயா கோயில் போன்று கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சக்குலத்துகாவு கோயிலில் நாரி பூஜை  நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஜெயிலர் ஸ்டைலில் ரஜினியுடன் இணையும் ராணா, பகத்

ராமர் பாலம் வழக்கு: உச்சநீதிமன்றம் உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share