நாட்டு மக்களுக்கு வாழ்த்து-பிரதமர் மோடி

Published On:

| By Jegadeesh

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

கொரோனா பெருந்தொற்று பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கிறிஸ்தவர்களால் சிறப்பாக கொண்டாட முடியாத நிலை இருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று (டிசம்பர் 25 ) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்! இந்த சிறப்பான நாள், சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சிக்கான மனநிலையை அதிகரிக்கட்டும்.

ADVERTISEMENT

இயேசு கிறிஸ்துவின் உன்னத எண்ணங்கள் மற்றும் சமூகத்திற்கு சேவையாற்ற வலியுறுத்தியது ஆகியவற்றை நாம் நினைவுகூர்வோம் என்று கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்!

அடுத்த 3 மணி நேரம்: எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share