வன்முறையின் புதிய முகமா ‘ஹிட் 3’!?

Published On:

| By uthay Padagalingam

HIT 3 Teaser and Release Date

’வன்முறை இல்லாத படத்தைப் பார்க்கறதே பெரிய விஷயமா இருக்கே’ என்ற தொனியிலான பேச்சுகளைத் தற்போது அதிகம் கேட்க நேர்கிறது. அந்த அளவுக்குச் சாதாரண கமர்ஷியல் படத்தில் கூடச் சண்டைக்காட்சிகளில் ரத்தம் தெறிக்கிறது. HIT 3 Teaser and Release Date

’பெண்கள் மீதான வன்முறை சட்டத்தின்படி தண்டனைக்குரியது’ என்று சில வாசகங்கள் ஒரு திரைப்படத்தின் முன்னே சேர்க்கப்படுகின்றன. ’இந்த படத்தின் காட்சியாக்கத்தில் விலங்குகள் ஏதும் துன்புறுத்தப்படவில்லை’ என்ற வாசகங்களையும் அதில் சேர்க்கலாம். சமீபகாலமாகத்தான் இவற்றைப் பார்க்க நேர்கிறது. இவ்வாறு குறிப்பிடும் அளவுக்குச் சம்பந்தப்பட்ட திரைப்படங்களின் உள்ளடக்கத்தில் காட்சிகள் அமைந்திருக்கின்றன என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.

ADVERTISEMENT

ஒருகாலத்தில் நடிகைகளைக் கவர்ச்சியாகக் காட்டுவது, ஆபாச வசனங்கள் பேசுவது, கதைச் சித்தரிப்பில் எல்லை தாண்டுவது போன்றவை ஆட்சேபணைக்குரிய வகையில் ஒரு படத்தில் இடம்பெற்றிருக்கும். அதற்கான அளவுகோல், ஒவ்வொரு மொழிப் படங்களிலும் வேறுபட்டிருக்கும். சம்பந்தப்பட்ட தணிக்கைத் துறை அதிகாரிகளின் கருணையால் அது நிகழும்.

ஆனால், வன்முறைக் காட்சிகளைத் தாங்கி வரும் உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை தற்போது அனைத்து மொழித் திரைப்படங்களிலும் ஒரே அளவுகோல் பின்பற்றப்படுவது ஏன், எப்படி, யாருக்காக என்ற கேள்விகள் எழுகின்றன. HIT 3 Teaser and Release Date

ADVERTISEMENT

‘விஎஃப்எக்ஸ் மூலமாக அக்காட்சி உயிரூட்டப்பட்டிருக்கிறது’ என்பது உட்பட எத்தனை சால்ஜாப்பு சொன்னாலும், அந்த சித்தரிப்பு நம்மில் ஏற்படுத்தும் தாக்கம் எல்லையைத் தாண்டி வெகுதூரத்தில் நிற்பதை நாம் நன்றாக அறிவோம்.

பதினெட்டு வயதைத் தாண்டிப் பக்குவம் உள்ளவர்களாகக் கருதப்படுபவர்களுக்கே இந்தக் கதி என்றால், அதனைக் காணும் குழந்தைகளின் நிலையை எண்ணிப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. ஆனால், அவற்றுக்கு நடுவேதான் அவர்களது உலகில் மொபைலும் டிவியும் இதர சாதனங்களும் உலா வந்து கொண்டிருக்கின்றன.

ADVERTISEMENT

தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை, குறிப்பிட்ட வகைமை திரைப்படங்களில் மட்டுமே வன்முறைக் காட்சிகள் அதிகம் இடம்பெறும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. குறிப்பாக, ‘கேங்ஸ்டர்’ வகைமை படங்களில் அப்படிப்பட்ட சித்தரிப்பு இருக்கும். த்ரில்லர், ஹாரர் படங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அப்படிச் சில ஷாட்கள் இடம்பெறுவது வழக்கமாக இருந்திருக்கிறது.

இன்று ஆக்‌ஷன், அட்வெஞ்சர், ட்ராமா வகைமை தொடங்கி ரொமான்ஸ் படத்தில் கூட வன்முறை தாண்டவமாடுகிறது. HIT 3 Teaser and Release Date

ஒரு கதையில் நிறைந்திருக்கும் அழுத்தத்தை அதிகப்படுத்திக் காட்ட வன்முறையைத் துணைக்கு அழைத்து வருகின்றனர் இயக்குனர்கள். இப்படியொரு சூழலில், இந்தி திரைப்படமான ‘கில்’ வேறொரு திசையைக் காட்டியது.

அதில் வரும் சண்டைக்காட்சிகளைப் போன்று ‘ராவாக காட்டுகிறேன் பேர்வழி’ என்று ப்ராஸ்தடிக் ஒப்பனையாளர், விஎஃப்எக்ஸ் வடிவமைப்பாளர் சகிதம் சில குழுக்கள் படப்பிடிப்புகளுக்குக் கிளம்பியிருக்கின்றன. HIT 3 Teaser and Release Date

மலையாளத்தில் வெளியான ’மார்கோ’ திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றிருப்பதாகச் சொல்கின்ற ஊடகங்கள். ’திரையில் வன்முறையின் புதிய முகம்’ என்று அப்படத்தைச் சில ஊடகங்கள் வர்ணித்து வருகின்றன. அது வேறு வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. இப்போது, அதன் வழியில் ‘வன்முறையின் புதிய முகம்’ ஆக மாறியிருக்கிறாது ‘ஹிட் 3’.

என்னதான் அப்படத்தில் சில தொழில்நுட்ப அம்சங்கள் வியப்பைத் தருவதாக இருந்தாலும், கதையோட்டத்தில் நிறைந்திருக்கும் அதீத வன்முறையை எப்படி ஏற்றுக்கொள்ள முடிகிறது என்ற கேள்வி எழாமல் இல்லை. அது மட்டுமே ஒரு படத்தின் யுஎஸ்பியாக இருக்கலாம் என்று யார் தீர்மானிக்கின்றனர்? அதனைத் தொடர்ந்து வழிமொழிய முற்படுவதற்குப் பின்னிருக்கும் அரசியல் எத்தகையது? இது போன்ற கேள்விகளுக்குப் பதில்களைத் தெரிவது அவசியம்.

ஏனென்றால், துப்பாக்கியால் ‘டுப்.. டுப்..’ என்று சுடுவது போல ‘ஸ்பை ஆக்‌ஷன்’ படங்களில் காட்டப்படுவதில் தவறில்லை. எல்லா வகைமை திரைப்படங்களிலும் அப்படிப்பட்ட சித்தரிப்பு இடம்பெறுமானால், ரசிகர்கள் நிஜ வாழ்வில் அப்படிப்பட்ட சூழலை அடிக்கடி எதிர்கொண்டு வருவது போன்ற பிம்பம் காணக் கிடைக்கும். ஒருகட்டத்தில் அதுவே உண்மை என்று சிலர் எடுத்துக்கொள்வார்களானால், அதை விட மோசமான விஷயம் வேறேதும் கிடையாது.

சமீபகாலமாக வெள்ளித்திரையில் வன்முறையைத் தொடர்ச்சியாகக் காண்பதும் அத்தகைய விளைவையே ஏற்படுத்தி வருகிறது. HIT 3 Teaser and Release Date

விக்ரம், ஜெயிலர், கேப்டன் மில்லர், லியோ போன்ற பெரிய நட்சத்திரங்களின் படங்களில் நிறைந்திருந்த வன்முறைச் சித்தரிப்புகள் கேள்வியை எழுப்புவதாக இருந்தன. குழந்தைகள், பெரியவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் திரையரங்குகளுக்கு வருவார்கள் என்று தெரிந்தும் கூட, அவற்றை அனுமதித்தது ஏன்? படக்குழுவினர் ஒரே வார்த்தையில் ‘கதையில அதுக்கான டிமெண்ட் இருக்கு’ என்று மட்டும் சொல்லி ‘எஸ்கேப்’ ஆகிவிடுகிண்றனர்.

வன்முறைக் காட்சிகள் நிறைந்த ‘கேஜிஎஃப் 1 & 2’ படங்களுக்குக் கிடைத்த ‘பான் இந்தியா’ அந்தஸ்து அதன் பின்னிருக்கிறதா அல்லது அப்படிப்பட்ட காட்சிகளைத்தான் மாநிலங்கள் கடந்து மக்கள் ரசிப்பதாகச் சம்பந்தப்பட்ட படக்குழுவினர் நினைத்துவிட்டார்களா? இதற்குப் பதில் அறிய வேண்டியது அவசியம். HIT 3 Teaser and Release Date

ஏனென்றால், ‘இந்தக் கோட்டை விட பெரிதாக ஒரு கோட்டை நான் வரைவேன்’ என்று வளைவில் முந்திச் செல்லும் வாகனங்கள் போன்று ஒவ்வொரு திரைப்படமும் முந்தையதைத் தாண்டி நிற்க முயற்சிக்கிறது. அதற்கு ஒரு உதாரணமாக அமைந்திருக்கிறது, தெலுங்கில் நானி நடித்த ‘ஹிட் 3’ பட ட்ரெய்லர்.

‘நிகழ்ந்த கொலைக்குற்றம் குறித்து ஒரு போலீஸ் அதிகாரி விசாரணை மேற்கொள்வதாக’ ‘ஹிட்’ முதல் மற்றும் இரண்டாம் பாகங்களின் கதைகள் அமைந்திருந்தன. அவற்றின் இயக்குனர் டாக்டர் சைலேஷ் கொலேனு தான் ‘ஹிட் 3’ படத்தை இயக்கியிருக்கிறார்.

‘ஹிட் 3’யில் அர்ஜுன் சர்கார் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் நானி. ‘இந்த கேஸை அவன்கிட்ட கொடுக்கறதுல எந்தப் பிரச்சனையும் இல்ல; ஆனா அவன் லத்தியில சிக்குறவனை நினைச்சாதான் பயமா இருக்கு’ என்ற வசனம் ட்ரெய்லரில் உள்ளது. அதனைத் தொடர்ந்து நாயகனின் அறிமுகம் திரையில் வருகிறது. காட்டுமிராண்டித்தனமாக லத்தியால் ஒருவரை அவர் அடிப்பது போன்று ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது.

பிறகு, ஒரு நபரின் வயிற்றில் கூரான ஆயுதத்தால் குத்தியவாறு, ஏதோ ஒன்றை நாயகன் பிடித்திழுக்கும்ம் காட்சி வந்து போகிறது அது சில மீட்டர் தூரம் கயிறு போல வருகிறது. இன்னும் வேகமாக அதனை இழுக்க மேற்புறச்சுவர், நாயகன் உடல், அருகாமையிலுள்ள பொருட்களின் மீது ரத்தம் பீய்ச்சியடிக்கிறது. HIT 3 Teaser and Release Date

’உன் குடலைப் பிடுங்கி மாலையா போட்டுருவேன்’ என்ற பேச்சுகளைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை கேட்டுக் கொண்டிருந்தோம். திரையில் அதற்கு உருவம் தந்திருக்கிறார் டாக்டர் சைலேஷ் கொலேனு. HIT 3 Teaser and Release Date

வழக்கமான தெலுங்கு படங்கள் போலல்லாமல் குடும்பத்தோடு அனைவரும் சேர்ந்து பார்க்கும்படியான உள்ளடக்கத்தைத் தந்து வருபவர் நானி. அதனை வெகுகாலமாகப் பின்பற்றிவந்த ஒருவரே, அதனைக் காற்றில் பறக்க விட்டிருப்பது வருத்தத்தை அதிகப்படுத்தியுள்ளது.

 

சமீபத்தில் வந்த ‘பணி’ மலையாளத் திரைப்படம் உட்படச் சிலவற்றில் இது போன்ற காட்சியாக்கம் இடம்பெற்றிருப்பதை மறுக்க முடியாது. ‘ஹிட் 3’யும் கூட ’இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்’ படம் தான். நாளை இப்படம் வெற்றி பெற்றால், ‘இதுதான் வெற்றிக்கு பார்முலா போல’ என்று ரசிகர்களின் மனத்தோலை பிரித்தெடுத்து ‘உப்புக்கண்டம்’ போடுகிற வேலைகளும் இங்கு நிகழும். அதற்கு முன்னர் சுதாரித்துக் கொள்வது அவசியம்.

சமூகப் பிரச்சனைகள் குறித்து நீதிமன்றங்கள் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்வது போல, இது போன்ற விஷயங்களில் மத்தியத் திரைப்படத் தணிக்கை வாரியம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதா, மேற்கொள்ள இயலாதா?  

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share