பெயர் சொல்ல மறந்த தொகுப்பாளர் : கமலின் செயலால் நானி நெகிழ்ச்சி!

Published On:

| By christopher

Nani was moved by Kamal's actions!

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. Nani was moved by Kamal’s actions!

இதனையொட்டி படத்தின் ப்ரொமோசனுக்காக பல்வேறு நகரங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தெலுங்கு நடிகர் நானி அளித்த பேட்டியில், தன்னை கமலின் ரசிகராக அறிவித்துக் கொண்ட அவர், ‘விருமாண்டி’ படத்தின் ஒரு காட்சியில் கமலின் நடிப்பை பற்றிப் பேசியது வைரலானது.

இந்த நிலையில் தக் லைஃப் படத்திற்காக கமலின் நேர்காணல் பேட்டியை தனது யூடியூப் பக்கத்தில் நேற்று (மே 28) வெளியிட்டிருந்தார் சுதிர் ஸ்ரீனிவாசன்.

அதில், ‘சக நடிகர்களும், ரசிகர்களும் உங்களின் படங்களில் உள்ள பல விசயங்களை கூர்ந்து கவனித்து பாராட்டும்போது, எப்படி உணர்கிறீர்கள்? சமீபத்தில் கூட ஒரு நடிகர், உங்களின் விருமாண்டி படத்தின் ஒரு காட்சியை பாராட்டியிருந்தார். அதை கவனித்தீர்களா?’ என கமல்ஹாசனிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு கமல், ”அது நானி, சொன்னது சரியா? அப்படித்தான் இருக்க வேண்டும். நான் அவருக்கு நன்றி சொல்ல முடியும். ஆனால், நான் நானியின் பெயரைச் சொன்னதே அவருக்குப் போதும். ‘நன்றி, நானி’ என்று கூட நான் சொல்ல வேண்டியதில்லை. இதன் மூலம் நான் என்ன சொல்கிறேன் என்பதை அவர் புரிந்துகொள்வார் என்பது எனக்குத் தெரியும், அதே போலத் தான் நடிப்பும், சினிமாவும் மக்கள் புரிந்துகொள்வார்கள்” என கமல் தெரிவித்தார்.

நானி அந்த வீடியோவைப் பார்த்துவிட்டு, தனது எக்ஸ் பக்கத்தில், இதய எமோஜியுடன் ”போதும் கமல் சார் போதும்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share