ஹிட் 3 : விமர்சனம்!

Published On:

| By christopher

nani Srinidhi Shetty hit 3 movie review

நானியின் ‘ஆக்‌ஷன் அவதாரம்’ எடுபடுகிறதா?! nani Srinidhi Shetty hit 3 movie review

தீர்க்கவே இயலாத குற்ற வழக்குகளை, மனநலப் பிரச்சனைகளால் அவதிப்படுகிற நாயகனோ நாயகியோ முடிவுக்குக் கொண்டுவருகிற கதைகள் எப்போதுமே ‘ஹிட்’ ஆகும். அப்படியொரு பெயரையே ‘டைட்டிலாக’ கொண்டு வெளியாகின சைலேஷ் கொலானு இயக்கிய இரு படங்கள். தற்போது இந்த சீரிஸில் அடுத்ததாக ‘ஹிட் 3’ வெளியாகியிருக்கிறது. மேற்சொன்ன இரு படங்களையும் தயாரித்தவர் தெலுங்கு நடிகர் நானி. அவரே இந்த தெலுங்கு படத்தையும் தயாரித்திருக்கிறார்; கூடவே நாயகனாகவும் நடித்திருக்கிறார்.

இப்படம் தமிழ், இந்தியில் ‘டப்பிங்’ செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது. அதற்குக் காரணம் நானியோ, இதில் இருக்கிற வேறு கலைஞர்களோ அல்ல; அனிமல், மார்கோ, கேஜிஎஃப், புஷ்பா படங்கள் பாணியில் இதிலும் வன்முறை மிகக்கடுமையான அளவில் வெளிப்பட்டிருக்கிறது. அதற்கேற்றவாறு நானி நடித்த நாயக பாத்திரமும் ‘ஆக்‌ஷன் அவதாரம்’ எடுக்கிற வகையில் கதையம்சம் இருப்பதாகச் சொன்னது படக்குழு.

ADVERTISEMENT

அதற்குப் பொருத்தமான காட்சியாக்கம் ‘ஹிட் 3’யில் வெளிப்படுகிறதா? nani Srinidhi Shetty hit 3 movie review

ADVERTISEMENT

’ரத்தக்களரி’ ஆகிற களம்! nani Srinidhi Shetty hit 3 movie review

காவல் துறையில் பணியாற்றுகிற ஒரு அதிகாரியே இக்கதையின் நாயகன். அவர் மிகக்கொடூரமான முறையில் இரண்டு பேரைக் கொலை செய்கிறார். தடயங்கள் ஏதுமின்றிக் கொலையைச் செய்துவிட்டு, அதனை வீடியோவாக பதிவு செய்து ஒரு தளத்தில் ‘அப்லோட்’ செய்கிறார்.

அந்த தளம் முழுக்க அப்படிப்பட்ட வீடியோக்களே நிறைந்திருக்கின்றன.

ADVERTISEMENT

ஏதேனும் ஒரு அப்பாவியைப் பிடித்து வந்து, கொடூரமாகச் சித்திரவதை செய்து கொன்று, அதனைப் படம்பிடித்து அனுப்புபவர்கள் மட்டுமே அந்த தளத்தில் உறுப்பினர் ஆக முடியும். வெறுமனே கொலை செய்வதோடு, பாதிக்கப்பட்டவர்களின் உள்ளுறுப்புகள் சிலவற்றையும் அவர்கள் தனியே அனுப்பி வைக்க வேண்டும். அது நாயகனுக்கு வினோதமாகப் படுகிறது.

இந்த கும்பல் யார்? இவர்கள் பின்னிருப்பவர்கள் யார்? இவர்கள் செய்கிற குற்றங்களின் பின்னிருக்கும் காரணம் என்ன என்று அறிய முற்படுகிறார்.

அதன் தொடர்ச்சியாக, அந்த தளம் சார்ந்தவர்கள் அனைவருமே ஒருநாள் குறிப்பிட்ட இடத்தில் ‘களம்’ காண்பது தெரிய வருகிறது. அதை நோக்கிப் பயணிக்கிறார் நாயகன்.

அந்த பயணத்தில் அவருக்கு வெற்றி கிடைத்ததா, இல்லையா என்று சொல்கிறது ‘ஹிட் 3’யின் மீதி. ஆக, படம் முழுக்க ரத்தக்களரி உறுதி என்பதை இக்கதையே சொல்லிவிடும்.

இந்தக் கதையில், ‘ஹிட்’ எனும் ‘கொலை புலனாய்வுக் குழு’வின் (HIT – Homocide Intervention Team) அங்கமாகத் திகழ்கிறார் நாயகன். அவரது பாத்திரப் பெயர் அர்ஜுன் சர்க்கார். அவர் ஒரு மனநல மருத்துவரிடம் ‘கவுன்சலிங்’ பெற்று வருகிறார்.

மேற்சொன்ன விஷயங்களே நமக்கு குறிப்பிட்ட ‘சித்திரத்தை’க் காட்டும். ‘ஹிட் 3’ படம் நிச்சயம் அதற்கேற்ப இருக்கும். அது அனைத்து ரசிகர்களுக்கும் ஏற்புடையதாக அமைந்திருக்கிறதா என்ற கேள்வி முளைக்கும்போதுதான், நம்மை முரண் தொற்றுகிறது.

திரையில் கிடைக்கிற அனுபவம்! nani Srinidhi Shetty hit 3 movie review

கொடூரமான மனிதர்கள் சிலரை ஒரு அறைக்குள் அல்லது ஓரிடத்தில் அடைத்து வைத்து, அவர்களுக்கு இடையே போட்டி வைக்கிற மாதிரியான கதைக்களங்கள் மேற்கத்திய சினிமாவில் கொஞ்சம் அதிகப்படியாகவே காட்டப்பட்டிருக்கின்றன. அவற்றை நம்மூரில் தொடங்குகிற வேலையைச் சில சிறிய படங்கள் செய்திருக்கின்றன. அதனைப் பிரமாண்டமாக, நாடறிந்த ஒரு நட்சத்திர நடிகரின் வாயிலாகச் செய்ய முயன்றவற்றில் ஒன்றாகியிருக்கிறது ‘ஹிட் 3’.

இதன் இயக்குனர் சைலேஷ் கொலானு ரொம்ப வித்தியாசமான கதையை இதற்காகத் தேர்ந்தெடுக்கவில்லை. அதேநேரத்தில், எடுத்துக்கொண்ட களத்தைப் புதிதாக ரசிகர்கள் உணர்கிற மாதிரியான கதை சொல்லலை, முந்தைய இரண்டு பாகங்கள் போன்றே இதிலும் கையாண்டிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் சானு ஜான் வர்கீஸ், தயாரிப்பு வடிவமைப்பாளர் ஸ்ரீநாகேந்திர தண்டலா, படத்தொகுப்பாளர் கார்த்திகா ஸ்ரீனிவாஸ் என்று தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர், இயக்குனரின் கதை சொல்லல் திரையில் செறிவுடன் தெரிய மெனக்கெட்டிருக்கின்றனர். அவர்களை ஒருங்கிணைத்திருக்கிற விதம் அபாரம்.

குறிப்பாக, மிக்கி ஜே மேயரின் பின்னணி இசை பிரமாண்டமான ‘ஆக்‌ஷன்’ படம் பார்க்கிற உணர்வைத் தருகிறது. இதுபோக மேலும் பல தொழில்நுட்ப அம்சங்கள் இதிலிருக்கின்றன.

nani Srinidhi Shetty hit 3 movie review

நடிகர் நடிகையரைப் பொறுத்தவரை, இப்படத்தின் கதையும் காட்சியமைப்புமே சில வரைமுறைகளைத் தந்துவிடுகின்றன. அதற்கேற்ப இதில் நாயகன் நானி, நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் தோன்றியிருக்கின்றனர். nani Srinidhi Shetty hit 3 movie review

அவர்கள் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் ஈர்க்கின்றன. அந்த அளவுக்கு இதர காட்சிகள் சுவாரஸ்யமானதாக இல்லை.

‘குடும்பத்தோட பார்க்கலாம் இவர் படங்களை’ என்று ரசிகர்கள் புகழ்கிற நானியைப் போன்ற ஒருவர், வசூலில் முன்னணி வகிக்க விரும்பி இது போன்ற படங்களில் நடிப்பது கஷ்டமான விஷயம். அதனால், அவர் ‘ஹார்டு அண்ட் ஹிட்’ போலீஸ் அதிகாரியாக நடிப்பது பொருத்தமாக இருக்கிறதா இல்லையா என்று யோசிக்கவே தோன்றுவதில்லை.

அவரது தீவிர ரசிகர்களுக்கு, இந்த ‘ஆக்‌ஷன் அவதாரம்’ உவப்பானதாக இருக்கலாம். ஆனால், அவரிடத்தில் இருந்து சிறப்பான படங்களை எதிர்பார்ப்பவர்களுக்கு, அத்தகைய திரையனுபவம் இதில் காணக் கிடைப்பதில்லை.

இப்படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் பிரதீக் பப்பர். அவருக்குப் பெரிய முக்கியத்துவம் திரையில் தரப்படவில்லை. nani Srinidhi Shetty hit 3 movie review

மேலும் சமுத்திரக்கனி, ராவ் ரமேஷ், கோமலி பிரசாத், ரவீந்திரா விஜய் உட்படச் சிலர் இதிலுண்டு. டிஸ்கா சோப்ரா இதில் ‘ஹிட் 3’ குழுவின் தலைவராக வந்து போயிருக்கிறார்.

இது போக இப்படத்தில் நடித்தவர்கள் என்று சில டஜன் பேர் திரையில் வந்து போகின்றனர்.

‘ஹிட் 3’யின் மிகப்பெரிய ப்ளஸ் ஆக இதிலுள்ள வன்முறை காட்சிகளாக இருக்கின்றன.

சில படங்களில் நாயகனுக்காக சண்டைக்காட்சிகளில் விதவிதமான ஆயுதங்கள், அவற்றுக்கான சூழலமைப்பைத் திட்டமிட ஒரு குழு மெனக்கெடும். இதில், அதற்குப் பதிலாக ஒரு பாத்திரத்தைக் கொடூரமாகக் கொல்ல நாயகன் என்ன செய்கிறார் என்பதை விளக்க மெனக்கெட்டிருக்கிறது. லீ விட்டேகர் மற்றும் ரியல் சதீஷ் ஆகியோர் இதில் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கின்றனர்.

‘வீடியோ கேமை’ விடக் கொடூரமாக இருக்கிற வன்முறையில் ஊற வைக்கப்பட்ட ‘ஆக்‌ஷன்’ எபிசோடு சித்தரிப்புக்குச் சிலர் கைதட்டுவது மனநல ஆலோசனை மையங்களுக்கான தேவை இப்போது பெருகியிருப்பதை உணர்த்துகிறது.

உடனே, ‘அப்படியான படங்களுக்கும் தனி ரசிகர்கள் உண்டுதானே’ என்ற கேள்வி எழலாம். நிச்சயமாக, அப்படிப்பட்ட ரசிகர்கள் எண்ணிக்கை கணிசம் தான்.

அவர்களது எதிர்பார்ப்புக்கு ஏற்ப, கொடூரமான ஆக்‌ஷன் காட்சிகளுக்கான கற்பனைகளுக்குப் பொருத்தமான கதைகள் என்று தனி வகையறா உண்டு. அக்கதைகளில் வன்முறை சித்தரிப்புக்கென்று தேவை இருக்கும். ஆனால், ‘ஹிட் 3’ போன்ற படங்களில் அந்த விஷயம் திணிக்கப்பட்டதாக இருப்பதுதான் குறை. அது வன்முறையைக் கொண்டாட வைக்கவே உதவும்.

’இல்லை, இதுவே எங்களுக்குப் போதுமான அளவுக்கு நிறைவாக இருக்கிறது’ என்பவர்களுக்கு ‘ஹிட் 3’ பிடிக்கலாம்.

மற்றபடி, ’தொடர்ந்து சண்டைக்காட்சிகளைத் திரையில் பார்த்தாலே தலைவலி, காய்ச்சல், இதர பிரச்சனைகள் வந்துவிடும்’ என்பவர்கள் ’ஹிட் 3’ குறித்த தகவல்கள், புகைப்படங்கள் என எதையும் திரும்பிப் பார்க்காமல் இருப்பது நல்லது..! nani Srinidhi Shetty hit 3 movie review

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share