கடந்த 10 ஆண்டுகளில் வெளியான படங்களில் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் ‘மெய்யழகன்’ என்று நடிகர் நானி தெரிவித்துள்ளார். Nani appreciates karthi Meiyazhagan
சைலேஷ் கொலானு இயக்கத்தில் நானி, ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஹிட் 3’ திரைப்படம் வரும் மே 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ஏற்கனவே, இந்த படத்தின் இரண்டு பாகங்கள் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மூன்றாவது பாகத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

படத்தின் புரோமோஷனுக்காக சென்னை வந்த நடிகர் நானிக்கு ரசிகர்கள், ‘தமிழ்நாடு’ என்ற வாசம் பொருந்திய சட்டையை அன்பளிப்பாக அளித்தனர். இந்த சட்டையை போட்டுக்கொண்டு புரோமோஷன் நிகழ்ச்சியில் நானி பங்கேற்றது அவரது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தநிலையில், சினிமா விகடனுக்கு நானி, ஸ்ரீநிதி பேட்டி அளித்தனர். “சமீபத்தில் உங்களை கவர்ந்த தமிழ் படம் எது?” என்று நிருபர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஸ்ரீநிதி ஷெட்டி, “எனக்கு லப்பர் பந்து படம் மிகவும் பிடித்திருந்தது” என்று தெரிவித்தார்.
நானி கூறும்போது, “தமிழ் சினிமா மட்டுமல்ல, இந்த 10 ஆண்டுகளில் எனக்கு மிகவும் பிடித்தப் படங்களில் ஒன்று மெய்யழகன்.

நீங்கள் செட் போட்டு 1,000 கோடிக்கு படம் எடுத்தாலும், மெய்யழகன் போன்ற மெஜிக்கல் சினிமா எடுக்க முடியாது. அந்த படம் எனக்கு மிகவும் நெருக்கமானது. அந்தப் படத்தில் நடித்த கார்த்தி, அரவிந்த் சாமி என படக்குழு அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இது ஒரு கிளாசிக் படம்.
படத்தை பார்த்துவிட்டு நடிகர் கார்த்தியை தொடர்புகொண்டு இந்த படம் எனக்கு எந்த அளவுக்கு பிடித்தது என்று அவரிடம் பகிர்ந்துகொண்டேன். மேலும், அரவிந்த் சாமி சாருக்கு வாழ்த்துக்கள் சொல்ல சொன்னேன்” என்று தெரிவித்தார். Nani appreciates karthi Meiyazhagan