இடைத்தேர்தல் பரபரப்பில் இருக்கும் நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் சாதி, மதம், கரன்சி ஆகிய காரணிகளே வெற்றியை நிர்ணயிப்பவையாக இருக்கின்றன. அதிமுகவில் ரெட்டியார்பட்டி நாராயணனும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரனும் முக்கிய வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள்.
299 வாக்குச் சாவடிகள் கொண்ட நாங்குநேரி தொகுதியில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 25 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 385 பெண் வாக்காளர்கள், பத்துக்கும் குறைவான மூன்றாம் பாலினத்தவர் வாக்குகள் உட்பட 2 லட்சத்து 56 ஆயிரத்து 414 மொத்த வாக்குகள் உள்ளன.
தொகுதியில் எந்தந்த சாதி ஓட்டுகள் எவ்வளவு இருக்கிறது எனக் கள ஆய்விலும், மாவட்ட அதிகாரிகளிடமும் மின்னம்பலத்திற்கு கிடைத்த தொகுப்பு இதோ:

