300 கி.மீ. தரும் நானோ கார் எலக்ட்ரிக் வெர்சன்: ரத்தன் டாடாவின் கனவு நனவானது!

Published On:

| By Kumaresan M

ரத்தன் டாடாவின் கனவை புதுப்பிக்கும் வகையில் டாடா நிறுவனம், 300 கிமீ மைலேஜ் தரும் நானோ காரின் புதிய அப்டேட்டட் மாடலை அறிமுகப்படுத்தவுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு எளிய மக்களும் பயன் அடையும் வகையில் பைக் விலைக்கே காரை வழங்க வேண்டும் என்ற தனித்துவமான நோக்கத்தோடு அறிமுகப்படுத்தப்பட்ட கார் தான் நானோ. இது டாடா குழும முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவின் கனவு கார் ஆகும்.

நடுத்தர மக்களிடம் பலத்த வரவேற்பை பெற்ற இந்தக் கார், புதிய வடிவமைப்பில் மீண்டும் சந்தையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 2025 ஆம் ஆண்டு இந்த கார் சந்தைக்கு அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது.

அப்டேட் வெர்ஷனில் வெளிப்புற மறுவடிவமைப்பு அட்டகாசமாக மாற்றப்பட்டுள்ளது.  நெரிசலான நகர வீதிகள் மற்றும் நெரிசலான வாகன நிறுத்துமிடங்களில் சூழலை கருத்தில் கொண்டும், நவீனமயமாக்கப்பட்ட ஹெட்லைட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட இருக்கைகள், மேம்படுத்தப்பட்ட லெக் ரூம், நான்கு பெரியவர்கள் வசதியாக செல்லக்கூடிய வகையில் இருக்கைகள் என அனைத்திலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த காரில் airbags and an Anti-lock Braking System உள்ளது.

17 கிலோவாட் எலக்ட்ரிக் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கி.மீ செல்ல முடியும். 60 முதல் 70 கி.மீ வேகத்தில் செல்லலாம். 10 விநாடியில் 60 கி.மீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது. ஆரம்ப விலை ரூ.4 முதல் 6  லட்சம் வரை இருக்கலாம். இது தற்போதைய சந்தையில் மலிவான விலைதான். கார் சந்தையில் மற்ற போட்டியாளர்களை ஒப்பிடும் போது இது மிகவும் குறைவான விலை என்றே சொல்லலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

திருச்செந்தூர் சூரசம்ஹாரம் : விடிய விடிய சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கம்!

டிரம்பை வெற்றி பெற வைத்த அரபு அமெரிக்கன்ஸ்… எப்படி?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share