எடப்பாடியுடன் தொகுதி பங்கீடு குறித்து எதுவும் பேசவில்லை – நயினார் நாகேந்திரன்

Published On:

| By Pandeeswari Gurusamy

Nayinar Nagendran

சென்னையில் இன்று நடந்த கூட்டத்தில் எடப்பாடியுடன் தொகுதி பங்கீடு குறித்து எதுவும் பேசவில்லை என பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சென்னையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் தொகுதி பங்கீடு குறித்தும் பேசப்பட்டதா என கேள்வி எழுப்பபட்டது. அதற்கு கட்சியினரை திரும்பி பார்த்து சிரித்த நயினார் நாகேந்திரன் பின்னர் பேட்டியளித்தார். அப்போது தேர்தல் பொறுப்பாளர்கள் பியூஸ்கோயல், அர்ஜுன் மெகாவால் ஆகியோர் இன்று (டிசம்பர் 23) கமலாலயத்தில் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினா்.

ADVERTISEMENT

பின்னர் தமிழகத்தின் களநிலவரம் , தேர்தல் குறித்து பேசப்பட்டது எடப்பாடியை சந்தித்து பேசப்பட்டது. முதல்முறையாக வந்திருப்பதால் அவர்களை சந்தித்து பேசப்பட்டது. இதில் தொகுதி பங்கீடு பற்றி எதுவும் பேச வில்லை என தெரிவித்தார்.

ஓபிஎஸ்,டிடிவி குறித்து இன்று பேசவில்லை, பொதுவாக நிலவரம் எப்படி இருக்கின்றது, கடந்த சட்டமன்றத் தேர்தல் எப்படி நடந்தது, பாராளுமன்றத் தேர்தல் எப்படி நடந்தது, வாக்கு சதவீதம் போன்றவை குறித்துதான் பேசினோம். சட்டமன்ற தேர்தலை பொருத்தவரையில் திமுக அகற்றப்பட வேண்டும் என்பது நோக்கம், அதற்கு ஒத்த கருத்துடையவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

ADVERTISEMENT

எடப்பாடி பழனிசாமியை டிடிவி தினகரன் கடுமையாக எதிர்க்கும் பொழுது அவரை எப்படி அழைத்து வருவீர்கள் என்ற கேள்விக்கு, ஒரு காலத்தில் இந்திரா காந்தி மதுரைக்கு வந்த பொழுது , திமுகவினர் கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர். கல் எறிந்தனர். இந்திரா காந்திக்கு தலையில் ரத்தம் வந்தது.அதையும் கொச்சைப்படுத்தி பேசினார்கள். அடுத்த ஆறு மாதத்தில் திமுகவுடன் கூட்டணி வைத்தார்கள். அரசியலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது, எதிரிகளும் கிடையாது.

தேமுதிக ,பாமக போன்ற கட்சிகள் கூட்டணியில் இருக்கின்றார்களா ?வருவார்களா? என்ற கேள்விக்கு, அது இனிமேல் தான் தெரியும். இன்னும் தேர்தலுக்கு நாட்கள் இருக்கின்றது. பொங்கல் பண்டிகை முடிந்து நல்ல காரியம் நடக்கலாம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்றார்.

ADVERTISEMENT

அப்படியானால் இப்பொழுது வரை வழி பிறக்கவில்லையா என்ற கேள்விக்கு, “அதை நீங்கள் எப்படி வேணாலும் வைத்துக் கொள்ளலாம் என்றார். டிசம்பரில் வழி பிறக்கும் என தெரிவித்தது ஒரு மாதம் தள்ளி போகின்றது எனவும் தெரிவித்தார்

நூறு youtube சேனல்கள் இருக்கிறது, ஒவ்வொருவரும் ஒரு கருத்துகணிப்பு நடத்திக் கொண்டு இருக்கின்றனர், எல்லா கருத்துக்கணிப்புகளும்ஒரே மாதிரி இருக்காது. ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் நல்ல விடியலுக்குரிய அரசு வரும்.

இன்றைய கூட்டத்தில் விஜய் குறித்து எதுவும் பேசவில்லை என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share