ராமதாஸ் – அன்புமணி இடையிலான மோதலில் பாஜக எந்தவிதமான சமரச பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (ஜூன் 6) தெரிவித்துள்ளார். Nainar Nagendran says bjp
மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை இரவு மதுரைக்கு வருகிறார். ஜூன் 8-ஆம் தேதி மதுரையில் பாஜக மாநில நிர்வாகிகளை சந்திக்கிறார். பின்னர் மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்” என்றார்.
தொடர்ந்து ராமதாஸ் – அன்புமணி இடையிலான மோதலை ஆடிட்டர் குருமூர்த்தி மூலம் பாஜக சமரசம் செய்வதாக சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு, “ஆடிட்டர் குருமூர்த்தி பெரிய மனிதர். நாட்டில் நல்ல விஷயங்கள் நடைபெற வேண்டும் என்பதற்காக அவரது எண்ணங்களும் செயல்பாடுகளும் அமைந்து வருகிறது.
சமரசம் என்ற வார்த்தையில் எங்களுக்கு எப்போதுமே நம்பிக்கை உண்டு. ஆனால், ராமதாஸ் – அன்புமணி இடையில் பாஜக பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. பாமக, தேமுதிக எங்கள் கூட்டணியில் இணைவார்கள்” என்று தெரிவித்தார். Nainar Nagendran says bjp