“திமுக இல்லாத தமிழகம்” – கனவுகளைப் பட்டியலிட்ட நயினார் நாகேந்திரன்

Published On:

| By Pandeeswari Gurusamy

திமுக இல்லாத தமிழகம் வேண்டும் என தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (9.1.2026) திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, பாடியநல்லூரில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்களின் கருத்துகளை அறியவும், மக்களின் எதிர்காலக் கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறியவும், அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்துகொள்ளும் “உங்க கனவ சொல்லுங்க” என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பதிவில்,“‘உங்கள் கனவைச் சொல்லுங்கள்’ என்ற பெயரில் தமிழகத்தில் புதியதொரு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கியிருக்கிறார். நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு மெல்லத் தூக்கத்திலிருந்து விழித்திருக்கும் முதல்வருக்குத் தமிழக மக்களின் கனவுப் பட்டியலை நாங்கள் சொல்கிறோம்.

1. சீரான சட்டம் ஒழுங்கு.

ADVERTISEMENT

2. கள்ளச்சாராயமும் கஞ்சாவும் இல்லாத தமிழகம்.

3. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான தமிழகம்.

ADVERTISEMENT

4. திமுகவின் வெற்று விளம்பரம் இல்லாத தமிழகம்.

5. அரசுத் துறைகளில் ஊழல் இல்லாத தமிழகம்.

6. ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தன்மானத்துடன் வாழும் தமிழகம்.

7. தூய்மைப் பணியாளர்கள் விவசாயிகள், அங்கன்வாடி ஊழியர்கள் ஆகியோர் கண்ணீர் சிந்தாமல் வாழும் தமிழகம்.

8. அரசின் அநீதிகளை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை அடக்கும் பாசிசம் இல்லாத தமிழகம்.

9. விசாரணைக் கைதிகள், புலம்பெயர்ந்தோர் உள்ளிட்ட எவரும் கொல்லப்படாத தமிழகம்.

10. கல்விக் கடன் தள்ளுபடி செய்வோம், அரசு ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம், காஸ் சிலிண்டர் விலையைக் குறைப்போம் என்று பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்து தமிழக மக்களை ஏமாற்றாத அரசு.

11. இந்துமத வெறுப்பில்லாத அரசு.

மொத்தத்தில், திமுக இல்லாத தமிழகம் வேண்டும். அதுவே தமிழக மக்களின் கனவு. தமிழக மக்களின் இந்தக் கனவு வெகு விரைவில் நிறைவேறும்.”இவ்வாறு அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share