நாட்டாமைக்கு நயினார் நாகேந்திரன் கொடுத்த உறுதி!

Published On:

| By vanangamudi

கடந்த 2007-ஆம் ஆண்டு சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் தொடங்கினார். இந்தநிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் சமத்துவ மக்கள் கட்சியை அப்போதைய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் முன்னிலையில் பாஜகவுடன் இணைத்தார். Nainar Nagendran gives assurance

சரத்குமாரின் இந்த முடிவுக்கு ஒரு சில கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேவேளையில், மற்ற நிர்வாகிகள் அவருடன் பாஜகவில் இணைந்தனர். சமீபத்தில் சரத்குமாருக்கு பாஜகவில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்தநிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று (மார்ச் 15) சென்னை தி.நகரில் உள்ள Geetham Banquet Hall-ல் ‘நாட்டாமை குடும்பத்தினருடன் சந்திப்பு’ என்ற நிகழ்ச்சியை சரத்குமார் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த நிகழ்ச்சியில், சரத்குமார் குடும்பத்தினர் மற்றும் பாஜகவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், காந்தி, சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தின் முடிவில், நயினார் நாகேந்திரனை சந்தித்த சரத்குமார், “அண்ணே… சமத்துவ மக்கள் கட்சியை கலைச்சிட்டு பாஜகவுல இணைஞ்ச போது, பல மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் என்கூடவே பாஜகவுக்கு வந்துட்டாங்க.

ஆனா, ஒரு வருஷமாகியும் இன்னும் நிறைய பேருக்கு பொறுப்பு வழங்கப்படல. இதனால சில பேர் என் மேல வருத்தத்துல இருக்குறாங்க. அதனால, சமத்துவ மக்கள் கட்சியில இருந்து பாஜகவுக்கு வந்தவங்களுக்கு பொறுப்பு வழங்குனா நல்லா இருக்கும்னு” கோரிக்கை வைத்துள்ளார். நிச்சயமாக சமத்துவ மக்கள் கழகத்தில் இருந்து வந்தவர்களுக்கு பொறுப்பு வழங்கப்படும் என்று நாட்டாமையின் கோரிக்கைக்கு சம்மதம் தெரிவித்துள்ளார் நயினார் நாகேந்திரன். Nainar Nagendran gives assurance

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share