உதயநிதிக்கு நாட்டில் என்ன நடக்கிறது என தெரியவில்லை- நயினார் நாகேந்திரன் சாடல்

By Pandeeswari Gurusamy

|

Published on 14 Apr 2026, 11:40 AM

nainar

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று நெல்லையில் தமிழக பாஜக தலைவர் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு வாரந்தோறும் பிரதமர் வருகை தருகிறார், ஆனால் நிதி வரவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் தெரிவித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், “பாவம், அவர்களுக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. ஏனென்றால் அவர் சினிமா ஷூட்டிங்கிலேயே இருந்து கொண்டிருக்கிறார். அதனால் நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது உதயநிதிக்கு தெரியவில்லை. பிரதமர் மோடி வந்ததிலிருந்து சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்துள்ளார்.

ADVERTISEMENT

தூத்துக்குடியில் மட்டும் 4500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்துவிட்டுச் சென்றார். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பிரதமர் நரேந்திர மோடி 11 முறைக்கு மேல் தமிழ்நாட்டுக்கு வந்து சென்றுள்ளார்.

அவர் மலேசியா சென்றாலும், ஐநா சபைக்குச் சென்றாலும் தமிழைப் பற்றிப் பேசுகிறார். தமிழின் பெருமையை நிலைநாட்டுகிறார்.

ADVERTISEMENT

பனாரஸ் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு தனியாக ஒரு இருக்கையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். திருக்குறளைப் பல மொழிகளில் மொழிபெயர்க்க உதவி செய்திருக்கிறார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதிக்கு இது வாழ்வா-சாவா பிரச்சினை . அதனால் இன்று யாரைப் பற்றிப் பேசினால் எடுபடும் என்று நினைத்து பேசுகிறார்கள். ஆனால் அது மக்களிடம் எடுபடாது.”என்றார்.

தமிழ்நாடு எப்போதும் வடக்கிற்கு “அவுட் ஆப் கண்ட்ரோல்” தான் என்று ஸ்டாலின் கூறுவது குறித்த கேள்விக்கு, “உண்மையிலேயே அவுட் ஆப் கண்ட்ரோலாக இருப்பது தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்குதான். பாலியல் வன்கொடுமைகள் திமுக ஆட்சியில் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. காவல்துறை ஸ்டாலின் கையில் இல்லை, அவுட் ஆப் கண்ட்ரோலாகப் போய்விட்டது. இன்று தமிழ்நாடே திமுகவின் அவுட் ஆப் கண்ட்ரோலாகப் போய்விட்டது.” என தெரிவித்தார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel