நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் இன்று (ஆகஸ்ட் 15) காலமானார்.
நாகாலாந்து ஆளுநரும், பாஜகவின் மூத்த தலைவருமான இல. கணேசன், கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி சென்னையில் உள்ள தனது வீட்டில் தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
இதன் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், இல. கணேசன் இன்று மாலை சிகிச்சைப் பலனின்றி காலமானார்.
அவரது மறைவுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
