இன்ஸ்டா பக்கத்தில் கடைசி சமந்தா படத்தையும் நீக்கிய நாகசைதன்யா

Published On:

| By Kumaresan M

 

நாக சைதன்யாவும் சமந்தாவும் 4 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கு பிறகு டைவர்ஸ் செய்தனர்.

இருவருமே அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த நிலையில், பிரபல நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் நாக சைதன்யாவுக்கும்  கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது.  நாக சைதன்யா – சோபிதா துலிபாலா இருவரின் திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

நிச்சயதார்த்திற்கு பிறகு முதல் முறையாக இருவரும் சேர்ந்து எடுத்த  ஒரு புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டனர்.  அந்த  புகைப்படம்  வைரலானது. தற்போது சோபிதா துலிபாலாவும் நாக சைதன்யாவும் தங்கள் திருமண ஏற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர். டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இவர்களின் திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

சோபிதாவுடன் திருமணம் நடக்கவுள்ளதையடுத்து, நாக சைதன்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடைசியாக எஞ்சியிருந்த சமந்தாவின் புகைப்படத்தையும் நீக்கியுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு மஜிலி என்ற தெலுங்கு படத்தில் இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். இருவரும் தம்பதியாகவே  அந்த படத்தில் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் போஸ்டர் நாக சைதன்யாவின் இன்ஸ்டா பக்கத்தில் இடம் பெற்றிருந்தது. தற்போது, இந்த போஸ்டரையும் தன் இன்ஸ்டா பக்கத்தில் இருந்து நாக சைதன்யா நீக்கியுள்ளார். சமந்தாவுடனான பிரிவுக்கு பிறகு, மற்ற எல்லா படங்களையும் ஏற்கனவே அழித்து விட்ட நாகசைதன்யா மஜிலி படத்தின் போஸ்டரை மட்டும் அழிக்காமல் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, நடிகை சமந்தாவும் பாலிவுட் இயக்குநர் ஒருவருடன் காதலில் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, அவரும் விரைவில் திருமண அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை!

பிக் பாஸ் 8 : வன்மத்தை கக்கிய சவுந்தர்யா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share