“வங்கித் துறையில் வேலை வாங்கணும்னு கனவு கண்டுட்டு இருக்கீங்களா? ஐபிபிஎஸ் (IBPS) எழுதி எழுதி டயர்ட் ஆயிட்டீங்களா?” கவலையை விடுங்க… விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான தேசிய வங்கியில் (NABARD) இருந்து ஒரு சூப்பர் அறிவிப்பு வந்திருக்கு. நாடு முழுவதும் உள்ள நபார்டு கிளைகளில் காலியாக உள்ள ‘வளர்ச்சி உதவியாளர்’ (Development Assistant) பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொத்தம் 162 காலிப்பணியிடங்கள்! வங்கி வேலை தேடும் பட்டதாரிகளுக்கு இது உண்மையிலேயே ஒரு ‘கோல்டன் சான்ஸ்’.
வேலை விவரம் என்ன? இந்த வேலை ‘குரூப் பி’ (Group B) அந்தஸ்து கொண்டது.
- டெவலப்மென்ட் அசிஸ்டெண்ட்: 159 இடங்கள்.
- டெவலப்மென்ட் அசிஸ்டெண்ட் (இந்தி): 3 இடங்கள்.
மொத்தமுள்ள 162 இடங்களில், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பு உண்டு. பணி நியமனம் உங்கள் சொந்த மாநிலத்திலேயே கிடைக்க வாய்ப்புள்ளது.
யாருக்கெல்லாம் வாய்ப்பு?
- கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree) முடித்திருக்க வேண்டும்.
- முக்கிய நிபந்தனை: டிகிரியில் குறைந்தது 50% மதிப்பெண்கள் எடுத்திருப்பது அவசியம். (எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குப் பாஸ் மார்க் இருந்தாலே போதும்).
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். (அரசு விதிகளின்படி வயதுத் தளர்வு உண்டு).
சம்பளம் மற்றும் சலுகைகள்: “சம்பளத்தை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!” மாதம் அடிப்படைச் சம்பளம் மற்றும் இதர படிகள் (Allowances) எல்லாம் சேர்த்து கையில் சுமார் ரூ.32,000 முதல் ரூ.50,000 வரை சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதுபோக வீட்டு வாடகைப்படி, மருத்துவச் சலுகை என நபார்டு ஊழியர்களுக்குக் கிடைக்கும் ராஜ மரியாதை தனி!
தேர்வு முறை:
- முதல் நிலைத் தேர்வு (Prelims) – பிப்ரவரி 21, 2026.
- முதன்மைத் தேர்வு (Mains) – ஏப்ரல் 12, 2026.
- மொழித் திறன் தேர்வு (LPT) – இதில் தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி? விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- இணையதளம்: www.nabard.org
- கடைசி தேதி: பிப்ரவரி 3, 2026.
வங்கித் தேர்வுகள்ல பலரும் ஆங்கிலத்துல (English Section) தான் சறுக்குவாங்க. ஆனா, நபார்டு தேர்வு மத்த பேங்க் எக்ஸாம் மாதிரி அவ்ளோ கஷ்டமா இருக்காது. குறிப்பா, அசிஸ்டெண்ட் பதவிங்கிறதால ‘இன்டர்வியூ’ கிடையாது. மெயின்ஸ் எக்ஸாம்ல நல்ல மார்க் எடுத்துட்டீங்கன்னா, வேலை கன்ஃபார்ம்! கடைசி நாள் வரைக்கும் காத்திருக்காம இன்னைக்கே அப்ளை பண்ணுங்க.
