விஜய் குரலில் வெளியானது ‘நான் ரெடி’ ப்ரோமோ வீடியோ!

Published On:

| By Jegadeesh

நடிகர் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘நான் ரெடி’ பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் லியோ. இந்த படத்தில் சஞ்சய் தத், கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன்,மன்சூர் அலிகான், மிஷ்கின், த்ரிஷா , ப்ரியா ஆனந்த் ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் இப்படத்தின் முதல் பாடலின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Naa Ready First Single

அதன் படி, “நான் ரெடி தான் வரவா.. அண்ணன் நான் இறங்கி வரவா..” என தொடங்கும் பாடலை விஜய் பாடியிருக்கிறார். அவருடன் இணைந்து அனிருத் அசல் கோலாரும் பாடியுள்ளனர். இந்தப் பாடலை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

‘கலைஞர் கோட்டம்’: திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சர்ச்சை மேல் சர்ச்சை… தடை செய்யப்படுகிறதா ஆதி புருஷ்?

சட்டப்பேரவை நேரலை : தமிழக அரசு பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share