UPSC தேர்வில் இலக்கை எட்ட “நான் முதல்வன் திட்டம்” உதவியாக இருந்ததாக இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மருத்துவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய முடிவுகள் நேற்று (ஏப்ரல் 16) வெளியிடப்பட்டது. 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் எழுத்துத் தேர்வும், அதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி முதல் நேர்முகத் தேர்வுகளும் நடத்தப்பட்டன.
இந்நிலையில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய இறுதி முடிவுகள் வெளியானது. அதன்படி, மொத்தம் 1,016 பேர் மத்திய அரசு குடிமைப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தேர்வில் தமிழ்நாடு அளவில் 2வது இடமும், இந்திய அளவில் 78வது இடமும் பெற்று மருத்துவர் பிரசாந்த் தேர்ச்சி பெற்றார்.
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றது குறித்து மருத்துவர் பிரசாந்த் கூறியதாவது, “சென்னை மருத்துவக் கல்லூரியில் ஜுன் 2022ஆம் ஆண்டு மருத்துவ படிப்பை முடித்தேன்.
UPSC தேர்விற்கான எனது பயிற்சியை “நான் முதல்வன் திட்டம்” மூலம் தொடங்கினேன். இத்திட்டத்தில் தேர்விற்கான அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்பட்டது.
முதல் முயற்சியிலேயே இந்த தேர்வில் நான் வெற்றி பெற எனக்கு “நான் முதல்வன் திட்டம்” பெரிதும் உதவியாக இருந்தது.”எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நான் முதல்வன் திட்டம், என் கனவுத்திட்டம் மட்டுமல்ல, நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம்.
நேற்று (ஏப்ரல் 16) வெளியான UPSCresults அதற்கு சாட்சி” என பதிவிட்டுள்ளார்.
#நான்_முதல்வன் திட்டம்: என் கனவுத்திட்டம் மட்டுமல்ல; நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம்!
நேற்று வெளியான #UPSCresults அதற்கு சாட்சி! ❤ https://t.co/GNM1uJAFn5 pic.twitter.com/YcibeNz9C8
— M.K.Stalin (@mkstalin) April 17, 2024
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Gold Rate: சவரன் ரூ.55,000ஐ நெருங்கும் தங்கம்… இன்றைய நிலவரம் என்ன?