மதுரையில் பயங்கரம் : அமைச்சர் வீட்டருகே நாதக நிர்வாகி கொலை!

Published On:

| By Kavi

மதுரையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு 10 நாளில் மீண்டும் ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்தவர் கொலை செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் நாம் தமிழர் கட்சியில் வடக்கு தொகுதி துணைச் செயலாளராக இருந்து வந்தார்.

இன்று(ஜூலை 16) காலை வல்லபாய் சாலை பகுதியில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தபோது அவரை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட  ஆயுதங்களால் வெட்டியுள்ளது.

அப்போது தப்பித்து ஓட முயன்ற அவரை விரட்டி சென்று வெட்டி படுகொலை செய்துள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற தல்லாகுளம் போலீசார் பாலசுப்பிரமணியன் கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது பாலசுப்பிரமணியனின் உடல் உடற்கூராய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இவர் மீது மூன்று கொலை வழக்குகள் உள்ளது. இதனால் முன் விரோதம் காரணமாக பாலசுப்பிரமணியன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பாக இந்த கொலை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் வீடு அமைந்துள்ள பகுதியில் நடந்துள்ளது. இந்த பகுதியில் எப்போதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் நிலையில், கொலை நடந்திருப்பது மதுரை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

share market: Paytm க்கு SEBI எச்சரிக்கை- இன்றைக்கு கண் வைக்கப்படும் பங்குகள் எவை?

தோனி, விராட், ரோகித்துடன் சாதனை பட்டியலில் இணைத்த சஞ்சு சாம்சன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share