”அஞ்சலையம்மாள் அதிவிரைவு நீதிமன்றம் அமைப்போம்” என தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளதை நாம் தமிழர் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
சென்னையில் நேற்று நடைபெற்ற தவெக சர்வதேச மகளிர் தின விழாவில் பேசிய விஜய் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார்.
அதில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க அஞ்சலை அம்மாள் பெயரில் அதிவிரைவு நீதிமன்றம் அமைப்போம் என்பதும் ஒன்று.
ஒரு மாநில அரசால் நீதிமன்றத்துக்கு பெயர் சூட்டும் அதிகாரம் இருக்கிறதா? என்ற கேள்வியை முன்வைத்து விஜய்யை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி தமது எக்ஸ் பக்கத்தில், அஞ்சலையம்மாள் அதிவிரைவு நீதிமன்றம் அமைப்போம் என்கிறார் பக்கா மாஸ் தலைவர்.
நீதிமன்றத்துக்கு ஒருவரின் பெயரைச் சூட்ட முடியுமா? இந்தியாவில் எந்த நீதிமன்றத்துக்காவது எவரின் பெயரையாவது சூட்டி இருக்கிறார்களா?
எப்பா.. சாமி.. முடியல..! “என பதிவிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மணி செந்தில், “ ஒரு நீதிமன்றத்திற்கு ஒரு மாநில அரசால் பெயர் சூட்ட முடியாது என்று கூட தெரியாமல் உளறிக் கொட்டும் விஜய்யின் தற்குறித்தனம் ஒருபுறம் இருக்கட்டும். அது அப்படி உளறிக் கொட்டாமல் இருந்தால் தான் அதிசயம். ஸ்கிரிப்டை அப்படியே படித்து வாந்தி எடுக்கிற கருமம் அது. அதை விடுங்கள். கற்பனையாக யோசித்துப் பார்ப்போம்.
ஒருவேளை அந்த அதிகாரம் இருந்திருந்தால் இந்நேரம் திமுக சும்மா இருந்திருக்குமா..
தந்தை பெரியார் குடும்ப நீதிமன்றம்.
பேரறிஞர் அண்ணா மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்.
கலைஞர் மு கருணாநிதி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்.
பிறகு அதிமுக வந்தால் இந்த பேரை எல்லாம் மாற்றி
பொன்மனச் செம்மல் எம் ஜி ராமச்சந்திரன் மாவட்ட நீதிமன்றம்.
புரட்சித்தலைவி அம்மா ஜெ ஜெயலலிதா ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்.
ஐய்யய்யோ… காமெடியாக நினைத்து பார்த்தால் கூட தலையை சுற்றுகிறதே !” என பதிவிட்டுள்ளார்.
