வேலைவாய்ப்பு: மாவட்ட நீதிமன்றத்தில் பணி!

Published On:

| By Balaji

கோவை மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: கணினி இயக்குபவர் (Computer Operator)

ADVERTISEMENT

காலியிடங்கள்: 01

சம்பளம்: 26100 – 65,500

ADVERTISEMENT

கல்வித் தகுதி: B.Sc. Computer Science / BCA அல்லது BA / B.Sc / B.Com உடன் கணினியில் பட்டயப்படிப்பு மற்றும் தட்டச்சுத் தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஜெராக்ஸ் மிஷின் ஆபரேட்டர்(Xerox Machine Operator)

ADVERTISEMENT

காலியிடங்கள்: 15

சம்பளம்: 16,600 – 52,400

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆறு மாத காலம் ஜெராக்ஸ் மெஷினில் நகல் எடுக்கும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC / SC / ST / SCA பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: http://www.ecourts.gov.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், கோவை – 641018

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 20/8/2018

மேலும் விவரங்களுக்கு [http://ecourts.gov.in/sites/default/files/Notification%20for%20the%20post%20of%20Computer%20Operator_%20Xerox%20Operator_%20Nightwatchman_%20Masalchi_Sweeper_13_04_2018.pdf](http://ecourts.gov.in/sites/default/files/Notification%20for%20the%20post%20of%20Computer%20Operator_%20Xerox%20Operator_%20Nightwatchman_%20Masalchi_Sweeper_13_04_2018.pdf) என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆல் தி பெஸ்ட்.

,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share