Nநூறு கோடியை நெருங்கும் ஆதார்

Published On:

| By Balaji

ஆதார் அட்டையை கட்டாயமாக்கும் சட்டம் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசின் மானியங்களையும், நலத்திட்டங்களின் பயன்களைப்பெறவும் ஆதார் அட்டையைப் பயன்படுத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதனால், தகுதியற்றவர்கள் மானியங்களின் பலனை அனுபவிப்பது குறையும். உதவித்தொகை, சமையல் எரிவாயு மானியம் மற்றும் இதர நலத்திட்ட மானியங்களை நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்குக்கே செலுத்தும் திட்டத்துக்கு ஆதார் அட்டைகள் பயன்படுத்தப்பட உள்ளன. ஆதார் அட்டை வேண்டி பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை விரைவில் 100 கோடியை நெருங்க உள்ளது. தற்போதுவரை 99.91 கோடிப் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 100 கோடியை அடைந்த செய்தியை அறிவிக்க வருகிற திங்கட்கிழமை செய்தியாளர் சந்திப்பைக் கூட்டவிருக்கிறார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share