சோயாபீன் உற்பத்தியில் சரிவு!

Published On:

| By Balaji

கடந்த ஆண்டு காரிஃப் பருவத்தை ஒப்பிடும்போது இந்த ஆண்டில் சோயாபீன் உற்பத்தி 7 சதவிகிதம் சரியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய சோயாபீன் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (எஸ்.ஓ.பி.ஏ.) வெளியிட்டுள்ள அறிக்கையில், ’கடந்த காரிஃப் பருவ உற்பத்தி 109.92 லட்சம் டன்னாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டின் காரிஃப் பருவ உற்பத்தியில், சோயாபீன் உற்பத்தி 91.45 லட்சம் டன்னாகக் குறையும். சோயாபீன் பயிர் சாகுபடி பரப்பளவு குறைந்ததே உற்பத்தி குறைவதற்குக் காரணமாகும். இந்த காரிஃப் பருவத்தில் பயிர் சாகுபடி பரப்பளவு 101.05 லட்சம் ஹெக்டேராகும். இது கடந்த ஆண்டை விட 7.5 சதவிகிதம் குறைவாகும். கடந்த ஆண்டில் 109.7 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சோயாபீன் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. அதேபோல, இந்த ஆண்டில் மகசூல் ஹெக்டேர் ஒன்றுக்கு 901 கிலோவாக இருக்கும். கடந்த ஆண்டில் மகசூல் ஹெக்டேர் ஒன்றுக்கு 1002 கிலோவாக இருந்தது.

ADVERTISEMENT

இந்தப் பருவத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பயிர் சாகுபடி பரப்பு 54 லட்சம் ஹெக்டேரிலிருந்து 50 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துள்ளது. இந்த மாநிலத்திலும் மகசூல் ஹெக்டேர் ஒன்றுக்கு 905 கிலோவுக்கும் குறைவாகவே இருக்கும். கடந்த ஆண்டில் மகசூல் ஹெக்டேர் ஒன்றுக்கு 1020 கிலோவாக இருந்தது. இந்த ஆண்டிலும் சோயாபீன் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மாநிலமாக மத்தியப் பிரதேசமே இருக்கும். இங்கு இந்த ஆண்டில் 43.35 மில்லியன் டன் சோயாபீன் உற்பத்தி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share