சீனியாரிட்டி இழப்பு: ரயில்வே எச்சரிக்கை!

Published On:

| By Balaji

பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றத்தைத் தவிர்க்கும் அல்லது கால தாமதம் செய்யும் ரயில்வே அதிகாரிகள், பணி மூப்பினை இழக்க நேரிடும் என ரயில்வே வாரியம் எச்சரித்துள்ளது.

இது குறித்து ரயில்வே வாரிய மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,

2015ஆம் ஆண்டு அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பான அறிக்கையை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டது.அதில், பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரி ஒரு மாத காலத்திற்குள் பணியிலிருந்து மாறுவதை அவரது உயரதிகாரி உறுதிப்படுத்த வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “பணியிட மாற்றம் செய்யப்பட்ட இடத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் பணியில் சேர வேண்டும். இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரி தவிர்த்தாலோ அல்லது கால தாமதம் செய்தாலோ, இரு இடங்களிலும் பிரச்சினை ஏற்படும்.

இதன் காரணமாக, கடந்த 29ஆம் தேதியன்று புதிய உத்தரவை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்ற உத்தரவை ஒரு அதிகாரி பின்பற்றவில்லை என்றால், அவர் அந்த பதவி உயர்வு உத்தரவை ஏற்க மறுத்துவிட்டதாகக் கருதப்படும். இதையடுத்து, அவர் அந்த பதவி உயர்வை ஓராண்டு காலத்திற்குப் பெற முடியாது. அவர் பணி மூப்பு அடிப்படையை இழப்பார்” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share