கிச்சன் கீர்த்தனா: பிளாக் பீன்ஸ் சுண்டல்

Published On:

| By Balaji

சுண்டல்களை வெளியில் வாங்கி சுவைப்பதில் ஆர்வம் காட்டும் நாம், வீட்டிலேயே செய்து சாப்பிட சோம்பேறித்தனம் கொள்கிறோம். ஆனால், வீட்டில் செய்வதால் பணமும் மிச்சமாகும், நிறைவாக அனைவரும் சாப்பிடலாம். நொறுக்குத்தீனிகளைத் தவிர்க்க, தோழிகளே இதுபோன்ற டிஷ்களை வீட்டிலேயே செய்ய பழகிக்கொள்ளுங்கள்.

இன்றைய ஸ்பெஷல்… பிளாக் பீன்ஸ் சுண்டல்.

ADVERTISEMENT

**தேவையானவை:**

பிளாக் பீன்ஸ் – அரை கப் (வேகவைத்தது)

ADVERTISEMENT

வெங்காயம் – (பொடியாக நறுக்கியது) சிறிது

காய்ந்த மிளகாய் – 4

ADVERTISEMENT

கறிவேப்பிலை – சிறிது

கடுகு, உளுத்தம்பருப்பு – சிறிது

தேங்காய்த் துருவல் – சிறிது

எண்ணெய் – தாளிக்க

உப்பு – தேவைக்கு

**செய்முறை:**

வாணலியில் எண்ணெய் சிறிது ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு சேர்க்கவும். கடுகு பொரிந்தபின் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். இத்துடன் வேகவைத்த பீன்ஸ், தேங்காய்த் துருவல், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளற சுண்டல் ரெடி.

**கீர்த்தனா தத்துவம்:**

தத்துவம் அப்படிங்கறதே… யாருகிட்டயோ ஏமாந்ததுக்கு அப்புறமா நமக்கு தோன்றதுதான்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share