இந்தியா vs வங்கதேசம் சாதனைகள்!

Published On:

| By Balaji

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 687 ரன்களை குவித்துள்ள்ளது. இந்திய கேப்டன் கோலி தனது இரட்டை சதம் அடித்ததன் மூலம் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்தது மட்டுமின்றி, தொடர்ந்து 4 தொடரில் 4 இரட்டை சதங்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். மேலும் அணியின் கேப்டனாக ஒரு வீரர் அதிகமுறை 200 ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் முன்னேறியுள்ளார். மேலும் ஒரு அணி தொடர்ந்து 3 போட்டிகளில் 600 ரன்களை கடப்பது இதுவே முதன் முறை. விராட் கோலி இந்த சீசனில் 1168 ரன்களை அடித்துள்ளார், ஒரு சீசனில் இந்திய வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இது தான். இதுபோன்று பல சாதனைகளை இந்திய அணி இன்று நிகழ்த்தியுள்ளது.

இன்று இந்திய அணி வீரர் சஹா 106 ரன்களுடனும், ஜடேஜா 60 ரன்களுடனும் களத்தில் இருக்கும் போது ஆட்டம் டிக்ளர் செய்யப்பட்டது . அதன் பின்னர் தனது ஆட்டத்தினை தொடங்கிய வங்கதேச அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 41 எடுத்துள்ளது. நாளை இந்திய அணி சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை கைப்பற்றினால் இந்திய அணி எளிதாக இந்த தொடரை வெல்லும்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share