ADVERTISEMENT

இந்தியாவில் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்!

Published On:

| By Balaji

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஐந்து நாள் சந்திப்பு கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் முடிவில் 2021ஆம் ஆண்டு இந்தியாவில் நடக்கவிருந்த சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டிகளுக்குப் பதிலாக டி-20 உலகக் கோப்பைப் போட்டிகளை இந்தியாவில் நடத்த உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக ஒப்புக்கொண்டார்கள். இந்தத் தகவலை ஐசிசி தலைமை நிர்வாகி டேவிட் ரிச்சர்ட்சன் நேற்று (ஏப்ரல் 26) தெரிவித்தார்.

இதனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் டி-20 உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறும். 2020இல் ஆஸ்திரேலியாவிலும், 2021இல் இந்தியாவிலுமாக இந்தப் போட்டிகள் நடைபெறும். இதைத் தொடர்ந்து 2023இல் ஏற்கனவே திட்டமிட்டபடி 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிகளும் இந்தியாவில் நடைபெறும்.

ADVERTISEMENT

ஐசிசி உலகக் கோப்பைத் தொடர்கள் அடுத்தடுத்த வருடங்களில் நடப்பது இது முதல் முறையில்லை. இதற்கு முன் 2009ஆம் ஆண்டு இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியும் 2010ஆம் வருடம் மேற்கிந்தியத் தீவுகளில் உலகக் கோப்பை டி20 போட்டியும் நடந்தது குறிப்பிடத்தக்கது.,”

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share