ஆடியோ ரிலீஸ் பரிதாபங்கள்: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

முன்னாடிலாம் ஒரு படத்தோட ஆடியோ ரிலீஸ்னா அந்தப் படத்துல உள்ள எல்லா பாட்டையும் முதல்ல ரிலீஸ் பண்ணுவாங்க. இப்படித்தான் ரொம்ப நாளா ஆடியோ ரிலீஸ் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அதுக்கு அப்புறம் ‘சிங்கிள் ட்ராக் ரிலீஸ்’ அது இதுன்னு ஒரு ட்ரெண்டு ஓடிக்கிட்டுருந்துச்சு. இப்ப எந்த ட்ரெண்டுல ஓடிக்கிட்டு இருக்குனு பல சினிமாக்காரங்களுக்கே தெரியலை.

எக்ஸாம்பிளுக்குப் பாருங்களேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி செக்கச்சிவந்த வானம் ஆடியோ ரிலீஸ் பண்றோம்னு சொன்னாங்க. ஆனா நிகழ்ச்சியை பிரமாண்டமா வச்ச அவங்க ரெண்டே ரெண்டு பாட்டை மட்டும் ரிலீஸ் பண்ணிவிட்டுட்டு அம்புட்டுதான் எல்லோரும் வீட்டுக்குக் கிளம்புங்கனு சொல்லிட்டாங்க. அதுக்கு பிறகு ஒண்ணு ஒண்ணா ரிலீஸ் பண்ணி கடைசி பாட்டைக் கேட்குறதுக்குல்ல அந்த படமே ரிலீஸ் ஆயிடுச்சு.

சரி அந்த ஆடியோ ரிலீஸ்தான் இப்படினு பாத்தா, இப்ப இந்த சர்கார் ஆடியோ ரிலீஸை வேற மாதிரி உருட்டிருக்காங்க. அதாவது சர்கார் படத்துல இனிமேதான் ஆடியோ ரிலீஸே பிரமாண்டமாக பண்ணப் போறாங்க. ஆனா அதுக்குள்ள அவசர அவசரமாக ரெண்டு பாட்டை ரிலீஸ் பண்ணிட்டாங்க.

ஹ்ம்ம்.. ஒரு பக்கம் ஆடியோ ரிலீஸ்னு சொல்லிட்டு ரெண்டு பாட்டை மட்டும் ரிலீஸ் பண்ணுறாங்க. இன்னொரு பக்கம் ரெண்டு பாட்டை ரிலீஸ் பண்ணிட்டு அதுக்கு பின்னாடி ஆடியோ ரிலீஸ் பண்றாங்க. குட் காம்பினேஷன்ல…

**@Thaadikkaran**

தங்கமே பொன்னே என கொஞ்சியவர்களை பெட்ரோலே என கொஞ்ச வைத்திடும் போல இருக்கிறது பெட்ரோல் விலை..!!

**@shivaas_twitz**

புரட்சித்தலைவர் என்ன சொல்லியிருக்கார்..?

மக்கள் வரிப்பணத்துல பத்தடிக்கு ஒரு பேனர் வை, சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்ததே, டாஸ்மாக் சூழ், பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு செய்..!

ர.ர.

**@amuduarattai**

ஆதார் அட்டையில் இருக்கும் ஆதார் எண் மட்டுமே நம் அடையாளம்.அதில் உள்ள போட்டோ அல்ல.

**@shivaas_twitz**

எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவில் ‘நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடிதாங்க’ பாட்டு பாடினார் அமைச்சர் ஜெயக்குமார்-செய்தி

பிஜேபியுடன் உள்ள கூட்டணியை பாட்டாவே பாடிட்டார்..!

**@gips_twitz**

“எல்லாம் பேசிவிட்டு அட்மின் மீது பழி போடுவது தான் இப்போதைய டிரெண்ட்” – விஜய் சேதுபதி

இந்நேரம் எச்.ராஜா ,விஜய் சேதுபதி பேர டேவிட் விஜய் சேதுபதினு மாத்திருப்பாரு…

**@shivaas_twitz**

எந்த வித சுவாரசியமும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது வாழ்க்கை…

புரட்டாசி ஞாயிறை போல..!

**@Uma1Maheshwari**

அலட்சிய புரிதல்

அதீத புரிதல் இவை இரண்டுமே இயல்பான பிரியத்தை பிரித்துவிடும்

**@srijyo10**

Ctrl C & V

CcV

மணிசாரு ஒரு லெஜென்டுடா

**@vickytalkz**

பிறந்த நாளில் புது கட்சி :ரஜினி முடிவு – செய்தி

அன்னைக்கு காலைல ஆறு மணி இருக்கும் கோழி கொக்கரக்கோன்னு கூவிச்சா…

**@Aruns212**

‘எப்பப் பாரு போனை நோண்டிட்டே இருக்கே’ என்று திட்டும் சொந்தமே,’ஒரு நல்ல போனா சொல்லு,வாங்கணும்’ என்றும் நம்மைக் கேட்கும் #Oruviralpuratchi

**@pachaiperumal23**

மாதக் கடைசியில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை உணவெண்பது பெரும்பான்மை பேட்சலர்களுக்கு வடை டீயுடன் முடிந்து விடுகிறது.

**@Anaamikatweetz**

ஒருவர் நிழலில்

வாழ வேண்டும் எனில்

அவர் நகர்வுக்கு

ஏற்ப

நாம் நடந்தாக வேண்டும்

படித்தது

**@ajmalnks**

“கட்சிகள் வேறாக இருந்தாலும், அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் ஒரே கொள்கை தான்!”- எஸ்.வி.சேகர்

ஆமா அங்கே இருப்பது இந்திய விஞ்ஞானிகள்

இங்கே இருப்பது இண்டர்நேசனல் விஞ்ஞானிகள்.

**@ameerfaj**

சொந்தக்காரன் கிட்ட போய் நம்ம கவலைகள சொல்லி ஆறுதல் தேடலாம்’னு பார்த்தா ‘ஹப்பாடா’னு பெருமூச்சு விடுறான் …

**@nik_twi2**

மாச கடைசியில்

ஓட்டை விழுந்த பாக்கட்டில

கூட சில்லறை இருக்குமென கை விட்டு

தேடுவதெல்லாம் என்ன

டிசைனோ

– லாக் ஆஃப்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share