தமிழில் இயக்கம், நடிப்பு என்று துடிப்பாக இருந்த இயக்குனர் மிஷ்கின் இப்போது மலையாளப்படம் ஒன்றில் நடிக்கிறார். வெடிக்கிறார்.
தமிழில் காந்தா என்ற மகா தோல்விப் படத்தை துல்கர் சல்மானும், ஜோம் வர்கீஸும் பெரும் பொருட்செலவில் தயாரிக்க நஹாஸ் ஹிதாயத் இயக்கும் படம் ஐ யாம் கேம். (I AM GAME)
இந்தப் படத்தின் கதையை சஜீர் பாபா, இஸ்மாயில் அபூபக்கர், பிலால் மொய்து எழுத, வசனங்களை – ஆதர்ஷ் சுகுமாரன் ஷஹபாஸ் ரஷீத் ஆகியோர் எழுதியுள்ளனர்.
‘இப்படம் துல்கர் சல்மானின் 40வது படம். படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் முதன் முதலில் மலையாளத்தில் நடிக்கிறார் மிஷ்கின்.
கொஞ்சம் கூட கருணையே இல்லாமல் மக்களைக் கொன்று தீய சிந்தனையுடனே எப்போதும் இருக்கும் கொடூரன் கதாபாத்திரமாம் மிஷ்கினுக்கு.
அது சரி… மலையாளிகள் ஒரு தமிழ் நடிகரை தங்கள் படத்தில் நடிக்க வைத்தால் அது அயோக்கியத்தனமான கேரக்டராகத்தான் இருக்கும். சொல்ல முடியாது. தமிழர்கள் எவ்வளவு மோசமானவர்கள் தெரியுமா என்று காட்டக் கூட மிஸ்கினை போட்டு இருப்பார்கள்.
— ராஜ திருமகன்
