புலியை கொன்று ரத்தத்தை உதட்டில் வைத்தார்- யுவராஜ் தந்தை யோக்ராஜ் புது கதை!

Published On:

| By Kumaresan M

தன் தந்தை சிறு வயதில் புலி ஒன்றை கொன்று அதன் ரத்தத்தை தனது உதட்டிலும் நெற்றியில் திலகம் போல வைத்ததாக யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் கிரிக்கெட் அகாடமி ஒன்றை நடத்தி வருகிறார். சச்சின் தெண்டுல்கர் மகன் அர்ஜூன் கூட இந்த அகாடமியில் பயிற்சி எடுத்து வருகிறார். இந்த அகாடமியில் சேர்வதற்கு என்ன தகுதி வேண்டுமென்று யோக்ராஜிடம் கேட்கப்பட்டது. அதற்கு , யோக்ராஜ்  இந்த அகாடமிக்குள் வரனும்னா முதல்ல சாவை பற்றிய பயம் இருக்க கூடாது என்கிறார். பின்னர், அதற்கு ஒரு விளக்கமும் அளித்துள்ளார். அதுதான், அதிரி புதிரி ரகம்.

“சிறுவயதாக இருக்கும் போது, நான் எனது தந்தை, தாய் ஆகியோர் புலி வேட்டைக்கு கலாதுங்கி காட்டுக்குள் சென்றோம். அப்போது, எனது தந்தை என்னை ஒரு புலி போல ஆக்குவேன் என்று கூறினார். நான் எனது தாயுடன் மரத்தின் மீது உச்சியில் இருந்தேன். என் தந்தை மட்டும் காட்டுக்குள் இறங்கினார். அப்போது, புலி ஒன்று வந்தது. அதனை 6 அடி  தொலைவில் இருந்து சுட்டு வீழ்த்தினார்.

பின்னர், எனது தாயையும் என்னையும் புலி இருந்த இடத்துக்கு அழைத்தார். அங்கே சென்ற போது, புலியின் ரத்தத்தை எடுத்து எனது உதட்டில் தொட்டு வைத்தார். நெற்றியில் திலகமும் இட்டார்.

அப்போது,  புலிக்குட்டி புல்லை சாப்பிடாது என்று காடே அதிரும் வகையில் கத்தினார். அதுதான், நான். இப்போதும், அந்த புகைப்படம் எனது வீட்டில் உள்ளது. இங்குதான் என் மகன் யுவராஜை பயமே இல்லாதவனாக மாற்றினேன். இந்த அகாடமி இப்படிதான் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

“கோவளம் ஹெலிகாப்டர் திட்டத்தை கைவிடுங்கள்” – அன்புமணி வார்னிங்!

சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு சோனியா, நட்டா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share