துர்கா பூஜை: உணவு பட்டியலில் இடம்பெறும் மட்டன் பிரியாணி, சிக்கன் தொக்கு… எங்கே தெரியுமா?

Published On:

| By christopher

மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாட்களிலாவது தங்களுக்கு நல்ல சாப்பாடு வழங்குமாறு சிறைக் கைதிகள் வைத்த கோரிக்கையை ஏற்று, மட்டன் பிரியாணி, சிக்கன் தொக்கு, பிரிஞ்சி மற்றும் மேற்கு வங்கத்தின் பாரம்பர்ய உணவுகளை சிறைக் கைதிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

“சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விசாரணைக் கைதிகள் மற்றும் தண்டனை பெற்ற கைதிகள் அனைவருக்கும், அக்டோபர் 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை மதிய மற்றும் இரவு உணவுகள் மாற்றியமைக்கப்படும். பண்டிகை நாட்களிலாவது நல்ல உணவு வழங்க வேண்டும் என்று சிறைக் கைதிகளிடமிருந்து வந்த கோரிக்கையை ஏற்று இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய உணவு வகைகளால், அவர்களது முகங்களில் மகிழ்ச்சியை பார்க்க முடியும் என நம்புகிறோம். அவர்களுக்காக எடுக்கப்படும் இந்த மாற்றம் நல்லதாக அமையும்” என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மட்டன் பிரியாணி மட்டுமல்லாமல், மீன் இறைச்சியுடன் மலபார் ஸ்பினாச், மீன் இறைச்சி மற்றும் பருப்புக் கடையல், பூரி – கொண்டைக்கடலை, சிக்கன் தொக்கு, பாஸ்மதி அரிசியில் செய்த புலாவ் வகைகளும் ஒவ்வொரு நாளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசைவம் சாப்பிடுபவர்களுக்கும் சைவ பிரியர்களுக்கும் தனித்தனியாக உணவுகள் சமைக்கப்பட்டு அவர்களுக்கு விருப்பத்துக்கு ஏற்ப பரிமாறப்பட இருக்கிறதாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் –  ஃப்ரிட்ஜில் வைக்கும் உணவுகளைப் பயன்படுத்துவது எப்படி?

சாணி மீது கல் எறியாதீங்க… பயில்வானை மறைமுகமாக தாக்கிய வெங்டேஷ் பட்

பொது மேடையில் துப்பாக்கியுடன் வந்த ஈரான் அதிபர்: காரணம் என்ன?

‘தங்கலான்’ ஓடிடி ரிலீஸ் என்ன ஆச்சு?

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம்: மூன்று வழித்தடங்கள்… ரூட் இதுதான்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share