தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் சூழல் தற்போது இல்லை என்று மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி இன்று (ஜூன் 29) சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் சட்டமன்றத்தில் நேற்று (ஜூன் 28) நடைபெற்றது. மானியக்கோரிக்கை மீது முதல்வர் ஸ்டாலின் இன்று பதிலளித்து பேசினார்.
இதனையடுத்து மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதன்படி கள்ளச்சாராயம் தயாரிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதத்தோடு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று சட்டதிருத்தம் செய்யப்பட்டது.
தொடர்ந்து பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி, “தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்து பேசிய மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி,
“தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என்ற விருப்பம் தமிழக அரசுக்கு இருக்கிறது. ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பதை சட்டமன்ற உறுப்பினர் சிந்தித்து பார்க்க வேண்டும்.
டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் ஒரு மதுக்கடையை மூடினாலும் அடுத்த கடைக்கு சென்று மது அருந்துகிறார்கள். மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைத்தாலும், குடிப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. தமிழகத்தில் தற்போது பூரண மதுவிலக்கை கொண்டு வரும் சூழல் இல்லை. எனவே எதிர்க்கட்சியினர் பேசும்போது யதார்த்தத்தை உணர்ந்து பேச வேண்டும். மதுவிலக்கு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் நிச்சயமாக நல்ல முடிவை எடுப்பார்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதனுக்கு பணி நீட்டிப்பு!
கொடநாடு வழக்கில் இன்டர்போல்… சட்டமன்றத்தில் ஸ்டாலின் அறிவிப்பு!
Comments are closed.