தேவரின் கொள்கைகள் காலத்தால் அழியாதது: பிரதமர் புகழஞ்சலி!

Published On:

| By Kavi

pm modi praises muthuramalinga devar

முத்துராமலிங்கத் தேவரின் கொள்கைகள் காலத்தால் அழியாதவை என்று கூறி பிரதமர் மோடி ட்விட்டர் மூலம் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61ஆவது குருபூஜையை முன்னிட்டு, பசும்பொன்னில் அமைந்துள்ள தேவர் நினைவிடத்தில் இன்று (அக்டோபர் 30) முதல்வர் ஸ்டாலின் தொடங்கி பல்வேறு கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் பிரதமர் மோடி, முத்துராமலிங்கத் தேவரை நினைவுகூர்ந்து இன்று பிற்பகல் 3:51 மணிக்கு ட்விட்டர் வாயிலாக மரியாதை செலுத்தியுள்ளார்.

அவரது பதில், “மதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெருமகனாரின் புனித குருபூஜையை முன்னிட்டு அவருக்கு நமது அஞ்சலியை செலுத்துகிறோம். சமூக மேம்பாட்டில் ஆழமாக வேரூன்றி இருந்த அவரது அரும் பணிகள், விவசாயிகளின் செழிப்பு, வறுமை ஒழிப்பு மற்றும் ஒற்றுமையை வலியுறுத்திய அவரது ஆன்மீகப் பாதை, தேசத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஒளியேற்றுகிறது. காலத்தால் அழியாத அவரது கொள்கைகள் எதிர்கால தலைமுறையினருக்கான உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக திகழும்” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

“ஆவின் கவரில் ஸ்டாலின் – விளம்பர வெறி” : அதிமுக!

கழன்று செல்லும் தலைவர்கள்.. கலகலக்கும் காங்கிரஸ்!

குறைவான விலையில் அசத்தலான இயர்பட்ஸ்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share