திருப்பரங்குன்றம் : நீதிமன்றமும் , RSS கும்பலும் இணைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி – முத்தரசன் குற்றச்சாட்டு

Published On:

| By Pandeeswari Gurusamy

Mutharasan opinion on the Thiruparankundram issue

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தை வைத்து நீதிமன்றமும், ஆர்எஸ்எஸ் கும்பலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் முத்தரசன் குற்றம் சாட்டி உள்ளார்.

கோவையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் , அக்கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று (டிசம்பர் 8) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,”தமிழகத்தில் பல முயற்சி எடுத்தும் பாஜகவால் கால் ஊன்ற முடியவில்லை. பல வழிகளில்
திமுக ஆட்சியை அகற்ற தீவிரமாகவும் கவனமாகவும் இருக்கின்றனர். கடவுளின் பெயரால் தீவிரவாதத்தை செயல்படுத்த முயல்கின்றனர்.

ADVERTISEMENT

திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில் ஜெயலலிதா தலைமையிலான அரசும், நீதிமன்றமும் ஏற்கனவே நிராகரித்த ஒன்றை, இப்போது மீண்டும் சுவாமிநாதன் என்ற நீதிபதி மூலம், கலவரத்தை ஏற்படுத்த முயல்கின்றனர்.

திருப்பரங்குன்றத்தில் அவர்கள் குறிப்பிடும் இடத்தில் இருப்பது தீபக்கல்லே கிடையாது. அது அளவை கல். மக்கள் பிளவுபடுவதை எந்த ஜனநாயகவாதியும் ஏற்க மாட்டான்.
கலவரத்தை கொண்டு வர வேண்டும் என நீதிமன்றமும் , ஆர்எஸ்எஸ் கும்பலும் இணைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். தமிழக அரசு கவனத்துடன் இதில் செயல்பட்டுள்ளது, இது போன்ற கலவரங்களை தமிழக மக்கள் ஆதரிக்க கூடாது என தெரிவித்தார்.

ADVERTISEMENT

மேலும் தமிழக ஆளுநர் கலவர சூழலை உருவாக்கி, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த முயல்கின்றார் எனவும் தெரிவித்தார். கோவையில் அரசு உதவி பெறும் கல்லூரியில், சரஸ்வதி நாகரீகம் என்ற தலைப்பி்ல் கருத்தரங்கு நடத்த இருக்கின்றனர். இதில் ஆளுநர் கலந்து கொண்டு பேச இருக்கின்றார். அவர் என்ன பேசுவார் என அனைவருக்கும் தெரியும் என்றவர், இந்த நிகழ்சியை நடத்த கூடாது என புகார் மனு கொடுத்து இருக்கிறோம், மாநில அரசு இந்த கருத்தரங்கத்திற்கு அனுமதி அளிக்க கூடாது. மீறி கூட்டம் நடத்தப்பட்டால் அனைத்து கட்சிகளின் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றார்.

திருப்பரங்குன்ற விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, கொள்கையை கைவிட்டு ஆர்.எஸ்.எஸ் சொல்வதை ஏற்கிறார் என குற்றம் சாட்டினார்.

ADVERTISEMENT

திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்தில்தான் தீபம் ஏற்றப்பட்டது . தீர்ப்பை விமர்சிப்பதற்கு எல்லாருக்கும் உரிமை உண்டு. நீதிபதியும்,ஆர்.எஸ்எஸ் கும்பலும் கூட்டணி சேர்ந்து இருக்கின்றனர் என நான் சொல்கின்றேன். சட்டரீதியான நடவடிக்கை எடுங்கள் அதை சந்திக்க தயாராக இருக்கிறேன் என்றார். நீதிபதிகள் ஒரு சார்பு நிலை எடுக்க கூடாது, ஆனால் இவர் சார்பு நிலை எடுக்கின்றார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share