“எடப்பாடியை இஸ்லாமியர்கள் மன்னிக்கமாட்டார்கள்” : ஸ்டாலின் பேச்சு!

Published On:

| By Kavi

Muslims will not forgive Edappadi

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இஸ்லாமியர்கள் மன்னிக்கமாட்டார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். Muslims will not forgive Edappadi

சென்னை, திருவான்மியூரில் திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவின் சார்பில் இன்று (மார்ச் 24) நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கலந்துகொண்டார். 

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர்,  “ அண்ணாவையும் கலைஞரையும் இணைக்க பாலமாக இருந்ததே, இஸ்லாமிய சமுதாயம்தான்! திருவாரூரில் நடந்த மிலாதுநபி விழாவில்தான் அண்ணாவும், கலைஞரும் முதன்முதலில் சந்தித்துக்கொண்டார்கள்.

கலைஞருக்கு எத்தனையோ நண்பர்கள் இருப்பார்கள். அதில் குறிப்பாக, அசன் அப்துல்காதர், கருணை ஜமால். கவிஞர் கா.மு.ஷெரீப் என்று தலைவர் கலைஞருக்கு உறுதுணையாக இருந்த இஸ்லாமியர்கள் பல நண்பர்கள் உண்டு.

இது எல்லாவற்றிற்கும் மேல், இன்றைக்கும் தலைவர் கலைஞரின் புகழைச் சொல்லும் “கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே!” பாட்டை பாடியவர் –  ‘இசை முரசு’நாகூர் ஹனிபா!

1967-இல் பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த, அதற்கு தோள் கொடுத்து நின்றவர் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத்” என்றார். 

தொடர்ந்து இஸ்லாமியர்களுக்காக கலைஞர் கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின்,  “குடியுரிமைத் திருத்தச் சட்டம் மூலமாக அச்சுறுத்தல் ஏற்பட்டபோது அதற்கு எதிரான மக்கள் இயக்கத்தை நடத்தி, ஒரு கோடி மக்களிடம் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தோம்.

ஆனால், இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்த கட்சிதான் அ.தி.மு.க.! குடியுரிமைத் திருத்த சட்டத்தை மாநிலங்களவையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்திருந்தால் அந்த சட்டமே நிறைவேறி இருக்காது. ஆனால், தி.மு.க.வும் – கூட்டணிக் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் எதிர்த்து வாக்களித்தோம். மக்கள் மன்றத்திலும் போராடினோம்.

ஆனால், அன்றைக்கு முதலமைச்சராக இருந்த பழனிசாமி என்ன கேட்டார்? ”குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் ஒரு முஸ்லீம் கூட பாதிக்கப்பட மாட்டார், யாருக்கு குடியுரிமை பறிபோனது? என்று கேட்டார். இதை சிறுபான்மையின மக்கள் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள். இப்போது அவர், எந்தக் கூச்சமும் இல்லாமல் இஸ்லாமியர் விழாவில் கலந்துகொள்கிறார். ஆபத்து வரும்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்பட்டுவிட்டு அந்த குற்றவுணர்ச்சியே இல்லாமல் இப்படி சிலர் இப்தார் விழாவில் கலந்துகொள்கிறார்கள்.

பொது சிவில் சட்டத்துக்கு எதிராகவும், இது தனிமனித உரிமையை பறிப்பது என்று மத்திய சட்ட ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியது தி.மு.க.தான்! இப்போது கூட வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா இந்திய அளவில் பேசுபொருள் ஆகியிருக்கிறது. சிறுபான்மையின மக்களின் உரிமையை பறிக்கும் நோக்கத்தோடு பா.ஜ.க. இதை கொண்டு வரப் பார்க்கிறார்கள். அதையும் நாடாளுமன்றத்தில் மிக கடுமையாக எதிர்த்து குரல் எழுப்பிக்கொண்டிருக்கிறது தி.மு.க.-வும் அதன் கூட்டணிக்கட்சிகளும். ஒருவேளை அது சட்டமானால், அதை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருக்கிறோம். பா.ஜ.க. அரசின் சதித் திட்டங்கள் நிறைவேற தி.மு.க. ஒருபோதும் அனுமதிக்காது. 

இப்படி இஸ்லாமியர் உரிமையை காப்பாற்றுகின்றவர்களாக செயல்படுபவர்கள் நாங்கள். இஸ்லாமியர் உரிமைக்கு போராடுகின்றவர்கள், வாதாடுகின்றவர்கள்தான் இப்படியான விழாக்களில் கலந்துக்கொள்ள தகுதி படைத்தவர்கள். அந்த தகுதியோடு உள்ளார்ந்த அன்போடு சகோதர உணர்வோடு நாங்கள் இதுபோன்ற விழாக்களை நடத்துகிறோம், பங்கெடுக்கிறோம். சிறுபான்மை மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நலத் திட்டங்களை அரசின் மூலமாக தொடர்ந்து நிறைவேற்றுவோம்! அதே நேரத்தில், இசுலாமியரின் அரசியல் உரிமைகளை நிலைநிறுத்தி அவர்களுக்கு காவல் அரணாக விளங்கும் இயக்கமாக திமுக எந்நாளும் இருக்கும்” என்று கூறினார். Muslims will not forgive Edappadi

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share