கேரள உணவுகளில் மலபாரி உணவுகளுக்கு தனி இடமுண்டு. இந்த நிலையில் சைவ உணவுகளில், அசைவ ருசி வேண்டும் என்று நினைப்பவர்கள் காளானின் செய்து அசத்தக்கூடிய இந்த மலபாரியைச் செய்து சுவைக்கலாம். வீட்டுக்கு வரும் திடீர் விருந்தினர்களுக்கு விருந்து படைக்கலாம்.
என்ன தேவை?
காளான் – 100 கிராம்
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
நறுக்கிய இஞ்சி – கால் டீஸ்பூன்
தேங்காய்ப்பால் – 50 மில்லி.
மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க…
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
எப்படிச் செய்வது?
அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும், தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதில் மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலாத்தூளைச் சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். இத்துடன் சுத்தம் செய்த காளான் சேர்த்து வெந்ததும், தேங்காய்ப் பால் ஊற்றி ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கிப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: காய்கறிக் குழம்பு
கிச்சன் கீர்த்தனா: மத்தி மீன் குழம்பு