ஆரோக்கியமான வலுவான செல் இயக்கத்துக்கு வைட்டமின் ஏ மிகவும் அவசியம். இந்தச் சத்துகள் அடங்கிய ரெசிப்பி முருங்கைக் கீரை வேர்க்கடலை துவட்டல். பெண்கள், வளரும் குழந்தைகள் வாரத்துக்கு ஒரமுறை செய்து மதிய உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதில் இரும்புச்சத்து, துத்தநாகம், புரதச் சத்துகளும் நிறைந்துள்ளன.
என்ன தேவை?
முருங்கைக் கீரை – 2 கப்
வறுத்த வேர்க்கடலை – 50 கிராம்
காய்ந்த மிளகாய் – 2 – 3
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
அரை கப் கொதிக்கும் உப்பு நீரில் பொடியாக நறுக்கிய முருங்கைக் கீரையைச் சேர்த்து வேகவிடவும். கீரை சீக்கிரமே வெந்துவிடும். வறுத்த வேர்க்கடலை மற்றும் காய்ந்த மிளகாய் இரண்டையும் ஒன்றிரண்டாக அரைக்கவும். கீரை வெந்ததும் நீர் சுண்ட சுருளக் கிளறவும். இதில், அரைத்த பொடியையும் தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
கிச்சன் கீர்த்தனா: கேரட் – தயிர் பச்சடி
சண்டே ஸ்பெஷல்: காலையில் காபி, டீயுடன் பிஸ்கட் சாப்பிடுபவரா நீங்கள்?