இந்து முன்னணி சார்பில் ஜூன் 22-ஆம் தேதி மதுரை வண்டியூரில் முருகன் மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதனால் தமிழக அரசியல் சூழலில் இந்த மாநாடு மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
முருகன் மாநாட்டை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதுஒருபுறம் இருக்க மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
மாநாட்டு ஏற்பாடு பணிகள் குறித்து நாம் விசாரித்தபோது,
“முருகன் மாநாட்டிற்காக தமிழகம் முழுவதும் தனியார் கல்லூரி நிறுவனங்கள், முக்கிய தொழிலதிபர்கள் தாமாக முன்வந்து கணிசமான தொகையை வழங்கியுள்ளனர்.

பக்தர்களை மாநாட்டிற்கு அழைத்து வருவதற்கு தென் மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரிகளில் பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களை கேட்டுள்ளனர். அவர்களும் வாகனங்களை தருவதாக சொல்லியிருக்கிறார்கள். வாகனத்திற்கான டீசல் செலவுகளுக்காக அந்தந்த மாவட்ட, நகர பகுதிகளில் உள்ள அதிமுக பிரமுகர்களிடம் உதவி கேட்டிருக்கிறார்கள். அதிமுக நிர்வாகிளும் உதவி செய்து வருகிறார்கள்.
அதேவேளையில், முருகன் மாநாட்டை மக்களிடம் கொண்டு செல்வதற்காக இன்ஸ்டாகிராமில் 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை ஃபாலோவர்ஸ் வைத்திருப்பவர்களை கடந்த 10 நாட்களாக வீடியோ போட வைத்து சோஷியல் மீடியாவில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இன்ஸ்டாகிராம் இன்ஃபுளுயன்ஸர்களுக்கு குறிப்பிட்ட தொகையும் வழங்கப்படுவதாக சொல்கிறார்கள்” மாநாட்டு திடலுக்கு சென்று வந்தவர்கள். Murugan conference preparation going on well