கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக ஜூன் மாதத்தில் கதுவா பாக்தாலி தொழிற்பேட்டையில் சிலோன் பீவரேஜ் கேன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ. 1,600 கோடியில் பாட்டில் நிரப்புதல் மற்றும் அலுமினிய கேன்கள் தயாரிக்கும் ஆலை அமைக்க 25.75 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்த ஆலை இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுக்கு சொந்தமானது. நிலம் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றக் கூட்டத்தில் எதிரொலித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஒய் தாரிகாமி, இலங்கை கிரிக்கெட் வீரருக்கு ஜம்மு காஷ்மீரில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. எப்படி இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டது?’’ என முத்தையா முரளிதரனின் பெயரைக் குறிப்பிடாமல் கேள்வி கேட்டார். Muralidaran surrenders land in Jammu
அதேபோல், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜி.ஏ.மிர், “இந்தியர் அல்லாத ஒருவருக்கு ஒரு பைசா கூட செலவழிக்காமல் நிலம் வழங்கப்பட்டது. இது ஒரு தீவிரமான பிரச்னை. இதில் விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று பேசியிருந்தார். முரளிதரனுக்கு நிலம் ஒதுக்கிய விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று காஷ்மீர் சட்டமன்றத்தில் பேசிய தொழிற்துறை அமைச்சர் சுரிந்தர் சவுத்ரி ஜம்முகாஷ்மீரில் தொழில் தொடங்க 11 இந்தியர் அல்லாத வெளிநாட்டவருக்கு நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதில், முத்தையா முரளிதரன் தனக்கு அளித்த நிலத்தை திருப்பி அளித்து விட்டார்” என்று தெரிவித்துள்ளார்.Muralidaran surrenders land in Jammu
சர்ச்சை வெடித்ததையடுத்து, முரளிதரன் ஜம்மு காஷ்மீரில் ஆலை அமைக்கும் முடிவையும் கைவிட்டார். புனே நகரில் புதிய ஆலையை அமைக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் முரளிதரனுக்கு சொந்தமான ஒரு தொழிற்சாலை இயங்கி வருகிறது.