திமுக முப்பெரும் விழா அறிவிப்பு: யார் யாருக்கு எந்தெந்த விருது?

Published On:

| By Minnambalam Login1

mupperum vizha dmk

சென்னையில் வருகிற செப்டம்பர் 17-ஆம் தேதி நடக்கவிருக்கிற திமுக முப்பெரும் விழாவையொட்டி வழங்கப்பட இருக்கும் விருதுகள்  மற்றும் விருது பெறுபவர்களின் பெயர் பட்டியல் இன்று(செப்டம்பர் 1) வெளியிடப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் அண்ணாவின் பிறந்தாள்(செப்டம்பர் 15), பெரியாரின் பிறந்தாள்(செப்டம்பர் 17) மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாளான செப்டம்பர் 17 ஆகிய மூன்று நாட்களைக் கொண்டாடும் வகையில் செப்டம்பர் மாதம் 15,16,17 ஆகிய மூன்று தேதிகளில் ஏதாவது ஒரு தேதியில், திமுக ‘முப்பெரும் விழாவை கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு திமுகவின் பவள விழா ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவையொட்டி முக்கியமான ஐந்து நபர்களுக்கு திமுக சார்பில் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், மற்றும் பேராசிரியர் விருதுகளை வழங்கப்படும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான விருது பெறுபவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பெரியார் விருது பாப்பம்மாள், அண்ணா விருது அறந்தாங்கி மிசா ராமநாதன், கலைஞர் விருது எஸ்.ஜெகத்ரட்சகன், பாவேந்தர் விருது கவிஞர் தமிழ்தாசன் மற்றும் பேராசிரியர் விருது வி.பி.இராஜன் ஆகியோருக்கு செப்டம்பர் 17-ஆம் தேதி வழங்கப்படவுள்ளது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

நடிகை மினு முனீரின் பாலியல் குற்றச்சாட்டு: மறுத்த மலையாள நடிகர் ஜெயசூர்யா

ரூ.400 கோடி முதலீடு 500 பேருக்கு வேலை : ஓமியம் நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

ரூ.150 வரை சுங்கக் கட்டணம் உயர்வு : வாகன ஓட்டிகள் கவலை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share