திமுக கண்டன பொதுக்கூட்டத்தில் மாநகராட்சி ஊழியர்கள்!

Published On:

| By christopher

municipality employees attend dmk meeting

மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் இன்று (மார்ச் 12) நடைபெற்றது. municipality employees attend dmk meeting

அதன்படி கடலூர் மாவட்ட தலைநகர் திருப்பாதிரிபுலியூர் தேரடி வீதியில் வேளாண் துறை அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் கண்டன பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் இரவு 9 மணி வரை நடைபெற்றது. இதில் திரளானவர்கள் பங்கேற்ற நிலையில், கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடும் 110 கடலூர் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்களும் கலந்துகொண்டது தற்போது தெரியவந்துள்ளது.

திமுக நடத்தும் கட்சி கூட்டத்தில் எப்படி மாநகராட்சி ஊழியர்கள் கலந்துகொள்ளலாம் என எதிர்க்கட்சியினர் இதுகுறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share